Sunday, May 17, 2015

பிடிப்பு ...


ஜன்னலோர சீட்டில் நானும் 
பக்கத்து இருக்கையில் நீயும் ...

நிலவும் நம்மை பிடிக்க எண்ணி 
நம்மோடு பயணிக்க ...

சற்றே சரிந்து தோள் சாய்கையில் 
என் கலைந்த கற்றை முடியை ...

நீ சற்றே சரி செய்கையில் 
தோன்றும் பிடிப்பு ...!!!

Thursday, February 19, 2015

நீ என்றால் ...


பௌர்ணமி தினம் 
மறந்திட வேண்டும் 
சீறும் கடல் அலை 
நீ என்றால் ...

கூந்தல் கட்டிட 
மறந்திட வேண்டும் 
வாரி செல்லும் புயல் 
நீ என்றால் ...

குடை கொண்டு சென்றிட 
மறந்திட வேண்டும் 
பெய்யென பெய்யும் பேய்மழை 
நீ என்றால் ...

தன்னிலை மறந்திட வேண்டும் 
என்னருகில் என்னவன் 
நீ என்றால் ...!!!

Tuesday, May 27, 2014

ஹைக்கூ காதல்கள் - 16

என் ஆயுள் ரேகை 
தேயும் அளவிற்கு ...

உன் தலை முடி 
கோத வேண்டும் ...!!!

சிறு ஆசை ...


பிறந்து விட்ட பேராசையை 
கொன்று பழகி ...

சிறு ஆசை கூட...
துளிர்க்க ..

நடு நடுங்கி இருதய 
மூலையில் முடங்கி ...

மூச்சு திணறி தானே 
மரணிக்கிறது ...!!!!
  

சுழல்வதற்கு...


என் நிகழ்காலத்தில் ...
இறந்த காலத்தை உயிர்ப்பித்து ...
பிறவா எதிர்காலத்தை புதைத்து ...

அந்த கணமே கணம் 
கொன்று விட்ட ...
என்னிடம் ...

ஞாலம் பிச்சை எடுக்க வேண்டும் 
சுழல்வதற்கு ஆணை கேட்டு ...!!!

கொஞ்சம் பேராசை தான் ...!!!

Thursday, April 24, 2014

நகல் ...


நீ பேசிய ஒவ்வொரு 
வார்த்தைகளையும் ....

மனம்  நினைவுகளில் 
நகலெடுத்தே ...
சிரித்து கொண்டே 
இருக்கிறது ...

ஏனென்றே 
தெரியவில்லை ....!!!!!!!!!

Related Posts Plugin for WordPress, Blogger...

உங்கள தானுங்க ...


இங்கே வந்து சென்றதற்கான கால்தடத்தை(COMMENTS) விட்டு செல்லுங்கள் ...

அதுவே என் கவிதைகளுக்கான கெளரவம் ...!!!