Thursday, December 15, 2011

நான் நானாகவே ...


நான் நீயாகி ...
நீ நாமாகி ...
நாம் நானாகி ...
நான் நானாகவே 
இருப்பதுவே ...
நிதர்சனமான உண்மை ...!

Wednesday, December 14, 2011

கண்சிமிட்டுகையில் ...


ஜனனமும் மரணமும் 
சேர்ந்தே சம்பவிகிறது 
நீ கண்சிமிட்டுகையில் !

என்னை எழுப்ப ...

நான் விழித்திருக்கையில்
உன்னது பார்வை போதும் ...

நான் தூங்குகையில் 
உன் ஸ்பரிசம் போதும் ...

இடுகாடு செல்கையில் 
நீ சுவாசிக்கும் 
சப்தம் போதும் ...!!!
Friday, December 02, 2011

முழுமை ...

தமிழை நேசித்து 
மொழியை சேமித்து 
வார்த்தைகளை செலவழித்து 
கவிதை புனைந்தாலும் 
நீ வாசித்த பிற்பாடே ...
என் கவிதைகள் ...
முழுமை பெறுவதாய்
தோன்றுகிறது ...!!!!


Friday, November 25, 2011

ஒன்று தான் ..!!!


பாறையும் நானும்
விதையும் நீயும்
ஒன்று தான் ..!!!

எதற்கும் நெகிழாத
பாறையில் ...
விதை விழுந்து
விருக்ச்சமாய் வளர்ந்து
குடையாய் நிழல்காத்தாலும்
ஒரு நாள் ...
அடி வேரால்
சிதைத்து விடும் ...!

அது போல தான் ...
எதற்கும் நெகிழாத
என்னை ...
அன்பால் வீழ்த்தி
சிநேகமாய் வளர்த்து
நேசமாய் காத்தாலும் 
ஒரு நாள் ...
பாசத்தின் மிகுதியால்
சிதைத்து விட்டாயே ... !!!

Thursday, November 10, 2011

கூடாது ...

பேச கூடாது 
அழ கூடாது 
கவலை கூடாது 
நினைக்க கூடாது
எழுத கூடாது 
குறுந்தகவல் கூடாது 
அத்தனையும் கூடாது 
எத்தனை தீர்க்கமான 
முடிவுகள் ...
நீரை சல்லடையில் 
சேமிக்கும் முயற்சியை 
போல் ஆகிவிட்டது 
அத்தனையும் உன்னால் ...!!!


Thursday, October 27, 2011

தீர்கமான முடிவு ...

இதோ என் கடைசி சொட்டு ...
ரத்தத்தின் விசும்பலை கேள் ...
வேண்டாம் வேண்டாம் ...
அது என்னோடே போகட்டும் ...!!!

இதோ என் கடைசி பாட்டு ...
கவியின் முற்றுபுள்ளியை பார் .
ஆமாம் ஆமாம் ...
அது இன்றோடே முடிந்தது ...


Thursday, October 20, 2011

உன் வார்த்தைகளால்...

உனக்காகவே எழுத பழகிவிட்ட 
என்னை ...
வார்த்தைகளால் கொன்று விட்ட 
பிறகு ...
என் கவிகளுக்கு மட்டும் 
சுவாசம் ...
இருக்குமா என்ன ?????

இப்போது என் வார்த்தை 
கோவைகளை வாசித்தால் ....
என் கல்லறை வாசகங்களாகவே 
தெரிகின்றன ....!!!
இது என் கவிதையும் அல்ல ...
புலம்பலும் அல்ல ...!!!
உன் வார்த்தைகளால் மடிந்து விட்ட 
என் கல்லறை வாசகம் தான் ...!!!!சிறு பிள்ளை...

நாம் போடும் சண்டைகளுக்கு ...
வர்ணனை எழுத நினைத்தேன் ...
கவிதைக்கு பதில் ...
சிரிப்பு தான் வருகிறது ...
உன்னை நினைத்தோ ...
என்னை நினைத்தோ  அல்ல ...
உரிமை கோரலில் ...
நம் சிறு பிள்ளை தனத்தை 
நினைத்தே ...!!!


நீ நிலவானால் ...?????

நீ நிலவானால் ...?????
ஐயோ கற்பனையில் 
கூட வேண்டாம் ..!!!
தேய்ந்து கொண்டும் ...
வளர்ந்து கொண்டும்...
ஒரு நாள் முழுமையாய் 
ஒரு நாள் காணாமல் ...
இப்படியெல்லாம் வேண்டவே 
வேண்டாம் ...!!!
என்னை சுட்டெரித்தாலும் ...
பெரவாயில்லை ...
நீ சூரியனாகவே இரு ...!!!!சிறு கீற்றாகவே...

உன் கவிக்கு எதிர் கவி 
எழுத ...
எவ்வளவு முயன்றும் 
முடியவில்லை ...
என் பேனா கூட ...
ஒத்துழைக்க மறுக்கிறது ...
வார்த்தைகள் வற்றிய 
குளமாகவே மாறிபோயின...
உனக்கு முன் என்றும் நான் ...
சிறு கீற்றாகவே இருக்கிறேன் ....!!!
அண்ணா ...!!!!


தண்டிக்கிறேன் ...

செய்த  தவறையே செய்கிறேன் ...
உன்னை நேசித்து கொண்டே 
இருப்பது...
என்னை நானே தண்டிக்கிறேன் ...
செய்த தவறையே செய்து ...!!!!
இருவரும்...

இசை இருந்து தாளமற்று ...
உணவு இருந்து உப்பில்லாமல் ...
வீணை இருந்து மீட்ட விரல்கலற்று ...
வண்ணங்கள் இருந்து தீட்ட தூரிகை  இல்லாமல் ...
மரங்கள் இருந்து நிழலற்று ...
ற்றுபடுகை இருந்து நீரில்லாமல் ...
அதுபோல தான் ...
இருவரும் இருந்து வார்த்தைகளற்று ...
மொழி இருந்து பேச்சில்லாமல் ...
நம்மை நாமே ஊமைகலாக்கினோம் 
சூழ்நிலையால் ...!!!!!நீ நிலவாக...

நீ நிலவாக மாறி போனால் ...
எவ்வளவு சுகமாய் இருக்கும் ...
மாலை நேர தனிமை பயணங்களில் 
என்னோடே ஜன்னல் வழியாக ...
வருவாய் ...!!!
மொட்டை மாடியில் நான் மட்டும் 
தனியாய் அழாமல் ...
உன்னிடம் சொல்லி ஆறுதல்
பெற்றிருப்பேன் ...
ஆனால்..
இப்பொழுது எப்படி வேண்டி 
கொண்டிருகிறேனோ 
அப்பொழுதும் அப்படியே வேண்டி 
கொண்டிருப்பேன் ...
விடியாமல் ...
இரவுகள் மீளா துயிலில் 
ஆழ்ந்து விட வேண்டும் என்று ..!!!Wednesday, October 19, 2011

நீ என்று...

உன் நினைவுகளோடே 
பயணிப்பதால் ...
நீ என்று நினைத்து ...
ஜன்னல் கம்பியையும் ...
காதலித்து தொலைக்கிறேன் ...!!!!சூழ்நிலை கைதியாக ...!!!

நானும் நிலவும் ஒன்று ...
நீ எத்தனை நேரம் 
காத்திருந்தாய் ...
என் வருகைக்காக ...
நண்பர்களிடம் எத்தனை முறை 
சொன்னாய் ...
என்னை பற்றி ...
என் தேய்தளுக்காக...
வருத்தமடைந்தாய் ..!!
அதே வளர்தளுக்காக ...
ஆனந்தமானாய் ..!!
ஆனால் ...
உன் இக்கட்டான சூழ்நிலையில் ...
நானோ ..
நீ மொட்டை மாடியில்...
தனியாய் அழுவதை பார்த்தும் ...
நிலா ...
படிகள் இல்லா காரணத்தினால் ...
இறங்கி வர இயலாததை ...
போலவே ...
நானும் இருந்துவிடுகிறேன் ...
சூழ்நிலை கைதியாக ...!!!
Tuesday, October 11, 2011

நினைவுகளாக ....!!!

ஐபாடில் நீ விரும்பும் 
இசை ...
புத்தகத்தில் நீ வாசிக்கும் 
ஆசிரியர் ...
என நீ ஆக்கிரமித்தாய் 
போதாதென ...
என் தனிமையையும் அபகரிக்கிறாய்
நினைவுகளாக ....!!!


Tuesday, October 04, 2011

CASUAL CLICK ...Photo courtesy : Abinaya


Monday, October 03, 2011

நினைவுகளாக ..!!!


உயிரற்றது கூட உயிர்பெறுகிறது 
நம் நட்பின் உலகில் ...!!!!
நினைவுகளாக ..!!!

Sunday, October 02, 2011

பார்வை...

My 100th post in my blog ...!!!


வார்த்தைகள் தான் 
கூர்மையானவையாம் ...
எனக்கு அப்படி 
தோன்றவில்லை ...
நீ என் மேல் கோபமாய் 
இருப்பது ...
உன் வார்த்தைகளை விட 
உனது உணர்சிகளற்ற 
வெறுமையை உள்ளடக்கிய 
பார்வையே ...
உணர்த்திவிடுகிறதே....!!!
அதனால் தான் அப்படி 
கூறுகிறேன் ...


நினைவு சுவடியில் ...!!!!

பயணத்தோடு மழை 
சாரல் ...
புத்தகத்தோடு இசையும் 
இணைய ...
சிநேக புன்முறுவலோடு 
சகபயணி ...
பக்கத்து இருக்கையில் 
மழலை ...
இவற்றோடு உன் நினைவுகளும் 
கைகோர்க்க ...
பேருந்துநிலையம் முற்றுபுள்ளி 
வைத்தது ...
பாதை நீளாதா என்ற 
ஏக்கத்திற்கு ...
மற்றவை போல் இல்லாமல் 
உன் நினைவோடு ...
இப்பயணமும் ஏனோ நினைவு 
சுவடியில் ...!!!!


Saturday, October 01, 2011

பொறாமையாக இருக்கிறது ...

மழை துளியும் ஆற்று நீரும் 
கை கோர்க்க ...

அந்நொடியில் மழலைகள் 
எதனோடு  விளையாடுவது ...
என்ற குழப்பத்தையும் மீறி 
ஆனந்தமாய் நீரில் ஆடுவதை ..

மேம்பாலத்தில் பேருந்தின் 
கண்ணாடி ஜன்னல் வழியாக 
பார்கையில் ...
பொறாமையாக இருக்கிறது ...Thursday, September 29, 2011

சாபம் ...

தூக்கம் கூட 
சாபமானது...
சிந்தனை 
சிதறல்களால் ..!!!


புத்தகங்கள் ...

இப்போதெல்லாம் 
தவறிவிடுகிறேன்...
நண்பர்களை 
தேர்வுசெய்வதில் ...
பிறர் கூறியதால் 
தோற்றத்தை  பார்த்து ...
தன்மையை ஆராயாமல் 
வாசிப்பில் மூழ்கி ...
முத்தெடுக்காமல் 
மீனையே பிடிக்கிறேன் ...!!!
Monday, September 26, 2011

அகமுடையாள் ...

ஆணுக்கு ...
அக்னி சாட்சியாக ...
புறத்தின் பாதியாய்
அன்பு சாட்சியாக...
அகத்தின் பாதியாய் 
இன்புற இயைந்தாலும் 
சமூகத்தில் இன்றளவும் 
பெண்டாட்டியாகவே  ....
இருக்கிறாள் பெண் ...!!!


பின்குறிப்பு : சுமார் 1000 ஆண்டுகளுக்கு  முன்னர் பணியாளாக வேலை பார்க்கும் பெண்களையே பெண்டாட்டி என்றழைத்தனர் . அதுவே காலபோக்கில் மருவி மனைவியை குறிக்கும் சொல்லாகி போனது . அகமுடையாள் என்பதே மனைவியை குறிக்கும் தமிழ்சொல் .

Sunday, September 25, 2011

ரசிப்பது ...!!!

என்னை நானே ரசிப்பதின் 
உச்சம் ...???
கண்ணாடியில் பிம்பத்தை ...
ரசிப்பதா ...???இல்லை இல்லை ...
எனது நிழலை 
கூட ரசிப்பது ...!!!

திரும்பி பார்க்கிறேன் ...

நான் கடந்த நாட்களை 
திரும்பி பார்க்கிறேன் ...
வெகு சிரத்தையுடன் படித்து 
கொண்டிருந்த நாவலின் ...
கடைசி பத்தி கிழிக்கபட்டிருந்தால் 
எப்படி சுழலும் எண்ணஅலைகள் ...???
அப்படி தான் இருக்கிறது ...
பல சம்பவங்களுக்கான விடை 
கற்பனையிலே ...!!!

அந்நாவலின் முடிவு கிட்டவில்லை 
என்பதற்காக ...
அதன் பின்அட்டையை வெறித்து 
கொண்டிருக்கிறேனா ???
இல்லையே ...
அடுத்த புத்தகத்தில் ..
எனது தேடல் விரியத்தான் 
செய்கிறது ....!!!

குட்டையாக தேங்காமல் ...
ஆற்றை போல் சமுத்திரத்தை தேடி 
அடுத்தடுத்த நிலைகளுக்கு ...
சுழன்று கொண்டு தான்  இருக்கிறேன் ...!!!!


Wednesday, September 21, 2011

கடைசி பயணமாக ...

எப்பொதும் ரயில் பயணத்தை ...
அதுவும் தனியாய் ...
கல்லூரி விடுப்பில் ...
சொந்த ஊருக்கு செல்கையில் ...
சிறு சந்தோசத்தோடு ...
ரசிக்கும் மனம் ...!!!!!

இம்முறை மட்டும் ...
ஏனோ நான்  ...
கனத்த இதயத்தோடே...
கண்களில் நீர்வழிய ...
பயணிக்கிறேன் ...!!!!

காரணம்...
கல்லூரி நாட்கள் ...
முடிந்த பின் ...
இதே பயணத்தை ...
கடைசி பயணமாக ...
மேற்கொள்ள நேருமே ...
என்ற எண்ண 
அலைகளாலே ..!!!!


Sunday, September 18, 2011

உணர்வுகள் ...

மனித உணர்வுகள் 
காய படுவதை ...
பற்றி பேசி 
உன்னை காய ...
படுத்தி விட்டேனோ ..!!!!

மனதின் மூலையில் 
எழும்பிய சின்னவினா ...
எண்ணங்களின் மலையில் 
மோதி மோதியே ....
எதிரொலியாய் பெரிதாக 
ஒழித்து கொண்டே ...
இருக்கிறது ...!!!!Thursday, September 15, 2011

இரட்டையர் ...

கருவறையில் ஒன்றாக ஆரம்பித்த 
பயணம் ...
இன்று தொடர்கிறது வெவ்வேறு 
பாதையில் ...
தனித்தனி நிழலில் இருந்தாலும் 
சந்தோசபடுவோம்...
ஒரே வானின் கீழ் 
இருப்பதால் ..!!!

Photo courtesy : me & my sister 

தேடல் ...


மீராவின் காதலி ..!!!

மீரா ...
எவ்வித நிபந்தனையுமின்றி 
கிருஷ்ணரை காதலித்தாள் ..!!!

என் தாயும் ...
அதை போல 
கணவனை நேசிக்கிறாள் ..!!!

அதனால் தான்..
நான் ..
மீராவின் காதலி ..!!!


Wednesday, September 14, 2011

EFFECTS BY ME....

புகைப்படம் எடுத்தவர்க்கோ 
பார்ப்பவர்களுக்கோ 
இது வெறும் புகைப்படம் .!

இதில் உள்ளவர்களுக்கோ 
உயிரோவியமான 
நினைவுகளை உள்ளடக்கியது .!


Photo courtesy : EEEians

ஏய் கட்டம் போட்ட சட்ட ....Photo courtesy : Madhava Ganesh

Tuesday, September 13, 2011

அழுகை ...

மழலையின் அழுகை 
கூட அழகு தான் ..!!!

Photo courtesy : Aadishesan 

காதல் தோல்வி ..!!

எனது கவிதைகள் ...
காதல் தோல்வியில் ..
எழுதியவை போல் 
உள்ளதாம் ..!!!
வாசித்தவர்கள் 
சொன்னார்கள் ..!!!

ஆம் தோற்றுத்தான் ..
போயிருக்கிறேன் ..

ஆணை காதலித்து 
அன்பு வறுமையில் ..
அல்ல ..
மொழியை காதலித்து 
சொல் வறுமையில் ...
ஒவ்வொரு முறையும் 
கவிதை புனைகையில் 
தோற்றுத்தான் ...
போகிறேன் ...!!!


காதல் தோல்வி ..!!

எனது கவிதைகள் ...
காதல் தோல்வியில் ..
எழுதியவை போல் 
உள்ளதாம் ..!!!
வாசித்தவர்கள் 
சொன்னார்கள் ..!!!

ஆம் தோற்றுத்தான் ..
போயிருக்கிறேன் ..!!

எனக்கு பிடித்த ...
கவிஞனின் வார்த்தைகளில் ...
ஒவ்வொரு முறையும் ..
தோற்கிறேன் ...
கவிதை காதலியாக ..!!!!


10 காசு ...

இதன் மதிப்பு தெரியுமா ..????

அப்பா சொல்வார் ..
எனக்கு பள்ளிக்கூடம் 
போகேல ....
உங்க பாட்டி ..
5 காசுக்கு பதிலா..
10 காசு குடுத்தா ..
கொண்டாட்டம் தான் ..!!!
மிட்டாய்கடைல ...
கை கொல்லாம ..
மிட்டாய் வாங்கி ..
நாள் பூரா மிட்டாய விட ..
சாஸ்தியா ..
அம்மா 10 காசு 
குடுத்தாங்கன்னு ..
சொல்லிடே  இருப்பேன் ..!!
நினைவுகளில் கோடி 
ரூபாய்க்கு சமம் ..!!!


இப்போதோ ..
நான் என் மகளிடம் 
காண்பிப்பதற்காக ...
என் பழைய உண்டியலில் ..
பத்திரமாக ...
ஒரு 10 காசு ..!!!Thursday, September 08, 2011

PHOTO TRANSFORMED TO PENCIL ART ...


தூக்கு தண்டனை

கொலை குற்றமாம் ....
கொலைக்காக கொலை...
தண்டனையாம் ...!!!


மழலைகளின் சிரிப்பு

வர்ணங்களின்றி...
கருப்பு வெள்ளையாய்
புகைப்படம் !

மழலைகளின் சிரிப்பே 
வர்ணங்களாய் 
பாய்கிறது மனதில் ..!!!

Photo courtesy: Pooja & Kaniksha

MOM & DAD..:)


Wednesday, September 07, 2011

மழை

பூமிக்கு வரும் விருந்தாளி ...

வரவேற்க மறுத்து !
குடைக்குள் ஒருவர் ...
கடை நிழலில் பலர் ...
விட்டைவிட்டு வெளியே வராமல் ...

சகித்து கொள்ள முடியாமல் 
வந்த விருந்தாளி...
தன் நண்பன் கடலுடனே 
மீண்டும் சேர்கிறான் ..!!!!


சிறு தொடுதலிலே ....


சும்மா ...

பாரதி ...

என்ன வளம் இல்லை 
இத்திருநாட்டில் ..
ஏன் கையேந்த வேண்டும் 
வெளிநாட்டில் ...

ஜெயா ...

இருக்கும் வளத்தை பெருக்கினால் 
வெளிநாட்டவரும் ...
கையேந்துவான் நம் 
நாட்டில் ...


2007ல் எழுதியது ...

இளைஞனே !
விழித்து எழு !
கனவிலும் உன் லட்சியம் 
தான் வர வேண்டும் ...
உன் இலட்சியத்தை 
அலட்சியம் செய்யாதே !
அப்படியானால் ..
அனைவரும் உன்னை 
அலட்சியம் செய்வர் !
ஒவ்வொரு  இளைஞனும் 
விளித்து எழுந்தால் !
2020 இல் அல்ல 
இந்தியா ...
2010 லே வல்லரசாகும் !

கனவுகளை நனவாக்குவோம்

இது 11std அரை ஆண்டு தேர்வில் எழுதிய கவிதை 

தலைப்பு : கனவுகளை நனவாக்குவோம் 

கனவுகள் காண்போம் !
விண்மீனை பிடிக்க ...
கல்பனாசாவ்லாவை போல !
புகழின் உச்சிக்குசெல்ல ...
சச்சின் டெண்டுல்கரை போல !
அமைதியாய் சாதிக்க ...
கரம்சந்த்காந்தியை போல !
புதியன படைக்க ...
தாமஸ் அல்வா எடிசனை போல !
இதற்க்கு மேலும் ...
கனவுகள் காண்போம் !
கனவுகளை நனவாக்குவோம் ...
இந்தியாவை வல்லரசாக்க !
என் தாய்திருநாட்டின் 
தலை நிமிர்த்த .!


Sunday, September 04, 2011

சாலையில் நான் ..!!!!

கைபிடி விலகிய ...
வழிதவறிய பயணத்தில் ..
ரயில் சிநேகமாய் பலர் ....
உயிர் நட்பை சிலர் ...
இலக்கை நோக்கி ...
(கல்லூரி) சாலையில் நான் ..!!!!


Saturday, September 03, 2011

பதவி

கர்வத்தால் ...
நிராகரித்தேன் .!

இமைக்கும்பொழுதில் ...
தவறவிட்டேன் .!

மீண்டும் ...
என்கையில் .!

அர்த்தமற்றதாய் ..!!!!


Friday, September 02, 2011

ஒன்றில் இரண்டு ..!!!!

ரவிவர்மனின் தூரிகை 
போதாது ...
நம்மை தீட்ட !

கம்பனின் கவிக்குள் 
அடங்காது ...
நமது கதை !

பீத்தோவனின் இசைக்கு 
தெரியாது ...
நமது கீதம் !

பிரமனின் மூளைக்கும் 
எட்டாது ...
நம் நட்பு !


ரவிவர்மனின் தூரிகை 
போதாது ...
கம்பனின் கவிக்குள் 
அடங்காது ...
பீத்தோவனின் இசைக்கு 
தெரியாது ...
பிரமனின் மூளைக்கும் 
எட்டாது ...

உனது கோபம் !!!!

Related Posts Plugin for WordPress, Blogger...

உங்கள தானுங்க ...


இங்கே வந்து சென்றதற்கான கால்தடத்தை(COMMENTS) விட்டு செல்லுங்கள் ...

அதுவே என் கவிதைகளுக்கான கெளரவம் ...!!!