Sunday, July 31, 2011

துள்ளல்...

எத்தனை முறை பயணித்தாலும் 
மிட்டாய்கடையை பார்த்த 
குழந்தையை போல் ...
மனதை துள்ள வைக்கிறதே 
ஜன்னலோர பயணம் ...!!!!!!


மனம்...

பயணத்தில் தனிமையை 
ரசிக்கும் மனம் ...

ஏன் வாழ்கையில் 
தனிமையை ரசிக்க
 மறுக்கிறது ...???????

நினைவுகள் ...

உன் நினைவுகளின் 
அளரலால் ...
நடுநிசியை கடந்தும் 
கண்கள் சொருக 
மறுக்கிறது ....!

நானும் வண்ணத்து பூச்சியும் ...

வண்ணத்து பூச்சியும் 
நானும் ஒன்று !

ஏனென்று தெரியாமலே 
கூட்டினுள் அவஸ்தை !

தன் மீதுள்ள 
வண்ணத்தை தானே 
ரசிக்க முடியாதது !

சுதந்திரமாய் சுற்றினாலும் 
சிறு வட்டதினுள் !

அதனால் தான் 
வண்ணத்து பூச்சியும் 
நானும் ஒன்று !!!!!


உன்னால் ...

உன்னால் !

வெல்வதும் நானே ...
தோற்பதும் நானே ...

துரத்துவதும் நானே ...
நிறுத்துவதும் நானே ...

வெறுப்பதும் நானே ...
விரும்புவதும் நானே ...

வினவுவதும் நானே ...
பதிலாவதும் நானே ...

உன்னால் தானே ...
தனிமையே !


துரத்துவது ...

தனிமையே !

சிறுவயதில் ...

உன்னை கண்டு பயந்தேன் !
ஏனெனில் என்னை யாரோ 
துரத்துவது போல் இருந்தது...!

இப்பொழுதும் ...

உன்னை கண்டு பயபடுகிறேன் !
ஏனெனில் என்னை நானே 
துரத்துவது போல் இருக்கிறது ...! 

தேடல் ...


என்னை பற்றி 
வெளியே தேடினேன் 
கிட்டவில்லை ...!

என்னுள் தேடினேன் 
கிடைத்தது ..!

உன்னால் தானே 
தனிமையே ...!!!!!!!!!!!!!

Related Posts Plugin for WordPress, Blogger...

உங்கள தானுங்க ...


இங்கே வந்து சென்றதற்கான கால்தடத்தை(COMMENTS) விட்டு செல்லுங்கள் ...

அதுவே என் கவிதைகளுக்கான கெளரவம் ...!!!