Wednesday, August 31, 2011

மழை

இது 12th std  அரை ஆண்டு தேர்வில் எழுதிய கவிதை ..!!!

சின்ன சின்ன நீர்துளியே ...
நீ வருவாய் என பூமி 
திறந்திருக்கிறது ...
மலையில் நீ விழுந்து 
ஓடையை உருவெடுத்து ...
ஆறாய் பெருக்கெடுத்து ...
நீயே மக்களை வாழவைகிறாய்!
அனால் மக்களோ ...
உன்னை வரவேற்க மனமின்றி 
கடைநிழலில் ,குடையினுள் ...!!!!
Tuesday, August 30, 2011

புகைப்படம் பேசுதே ....


இந்த புகைப்படம் ....
நம் கதையை சொல்லுதே !

வேறு வேறு மார்க்கத்தை 
சார்ந்தவர்களாக இருந்தாலும் 
நண்பர்களாக இருந்தோம் !

நம்முள் பிரிக்க முடியாத பந்தத்தை 
உருவாக்கியது இந்நாள்...!!!

ரக்ஷா பந்தன் !!!!


என் 50 தாவது கவிதைக்காக... எனது தோழியின் மடல் ..!!!!

என் விழிகளில் ஏக்கம் 
என் மொழிகளில் தாக்கம் 
என் வார்த்தைகளில் தயக்கம் 

இவைஅனைத்தும் கரைந்தன 
பெருக்கெடுக்கும் உன் 
கவிதையெனும் வெள்ளத்தில் .!

கவிதை என்னும் கரையால் 
தயக்கம் என்னும் அலை ஓய்ந்தது 
உன்னால் தோழியே ...

எனது மன அறையில் 
இன்னும் பச்சிளம் தான் 
அரை வயது கடந்த உன் கவிதை.!

வாழ்த்துக்களுடன் 
s. யோகமணி 

உனக்கு மட்டுமே

என் கவிதையை 
உன்னிடம் கடைசியில் 
காண்பித்தேன் ..!!!!
கோபித்துகொண்டாய்..

நீ கவனிக்கவில்லை ...
மற்றவர்களுக்கெல்லாம் 
அச்சுகோர்க்கப்பட்ட பிரதி ..!!!

உனக்கு மட்டுமே 
என் கையெழுத்து பிரதி...
என்பதை ..!!!!


TRIPLE SHOT .!!!


கண்ணீர் அஞ்சலி

ஏன் இப்போதெல்லாம் 
கவிதை எழுதுவதில்லை ..??
என்று அனைவரும் 
வினவுகின்றனர் ...!!!

யாருக்கு தெரியும் ....

என் உணர்வுகளை 
கொன்றதற்காக ...
 என் கவிதைகள் கூட 
கண்ணீர் அஞ்சலி...
செலுத்த சென்றுவிட்டன 
என்று ..!!!!ஆகா ....


Monday, August 29, 2011

செல்லத்தின் செல்லம்மா ..!!!

என்னிடம் ...
அம்மா ஒரு நாள் கேட்டா ...
நீ அம்மா செல்லம்மா..?
அப்பா செல்லம்மா..?நான் சொன்னேன் ...
செல்லத்தின் செல்லம்மா..!!!

என்ன உளற என்றாள்...

அப்பா உனக்கு செல்லம் ...
அப்பாக்கு நான் செல்லம் ...!
அப்ப நான் ...
செல்லத்தின் செல்லம்மா தான  ..!!!

ஆக மொத்ததுல 
அப்பா கோண்டுன்னு சொல்லிட்ட ...
என்று மெல்லிய சிரிப்போடு ...
அலுத்து கொண்டாள் அம்மா ..!!!!
Sunday, August 28, 2011

PINK


Saturday, August 27, 2011

GREYISH EFFECT ..!!!
Friday, August 26, 2011

சிலுவை

சிறுசிறு அர்த்தமற்ற பேச்சுகள் 
தான் ....
உறவுகளில் பாலமாம் ..!!!!
ஆனால் இங்கோ ...
பல உறவுகளில்
மௌனமே விரும்பி ...
ஏற்க்கப்பட்ட சிலுவைகளாக 
உள்ளது ..!!!SOFT FOCUSED .!!!


Thursday, August 25, 2011

கவிதை

50th POETRY IN MY BLOG ....!!! ALWAYS SPL ..!!! 

நீ எனக்காக எழுதிவிட்டு ...
வாசிக்க தராத 
கவிதைகளே .....
அதிகம் அர்த்தப்படுகிறது 
எனக்கு ...
அதை திருட்டுத்தனமாக ...
வாசிக்கையில் ...!!!! Wednesday, August 24, 2011

கற்பனை

நவநாகரிக ஆடையில் ...
அலையாடும் கூந்தலோடு 
காபிஷாப்பில் நண்பர்களுடன் 
வெகுநேர அரட்டை ....

காற்றை விட வேகமாக ...
காரில் உல்லாசமாக 
வெகுதூர பயணம் ...
ஜன்னலுக்கு வெளியே பார்த்தேன் 

பாவாடை தாவணியில் ....
களத்துமேட்டில் நான் ..!!! 
WHITE AND GREEN ..!!!


மௌனமும் பிடிக்குதே ..!!!

உன்னால் 
மௌனமும் பிடிக்குதே ..!!!

வார்த்தைகளில் வாயாடுவதை 
விட ....
மௌனத்திலே உணர்வுகளால் 
உரையாடுகிறோமே அதனால் ..!!!


Tuesday, August 23, 2011

பதுமை எனது கைவண்ணத்தில்
EFFECTS ...


<BEFORE EDITING >

    < AFTER EDITING >

Monday, August 22, 2011

ப்லாக்கில் எனது முதல் புகைப்படம் ...


" ரோஜா மகள்களுடன் "

Sunday, August 21, 2011

நாம் இருவரும் ....!!!

நாம் இருவரும் ....!!!

வார்த்தைகளில் வானவில்லை 
போல ...
பலவர்ணங்களாக பிரிந்திருந்தாலும் ....

மௌனத்திலே மழைதுளிகளாக ...
இருப்பதால் தான் ..

நம் நட்பு நதியாக ..
பெருக்கெடுத்து ஓடிகொண்டே
 இருக்கிறது..!!!
Friday, August 19, 2011

குழந்தை ..!!!

உன்னால் ....
மழலைகளின் பட்டாளத்தில் ...
ஒரேயொரு மிட்டாய் வைத்திருக்கும் 
குழந்தையை போல் ....
ஆகிவிட்டது எனது நிலை ..!!!!

எங்கே பறிபோய் விடுமோ...
 என்ற பயத்துடனே
நகர்கிறது என் நாட்கள் ..!!!

Thursday, August 18, 2011

கரும்பலகை...

உன்னை நினைத்தால் ....
கரும்பலகை கூட 
சிரிப்பு மூட்டுகிறது ..!!!!
Wednesday, August 17, 2011

உணர்வுகளை ...

பிறரது பொருட்களை 
எடுப்பதற்கே ....
அனுமதி கேட்கும் 
நாம்...!!!

ஏன் ...???
பிறரது உணர்வுகளை
கொள்வதற்கு...
யோசிப்பதே இல்லை ..!!!


உயிரற்ற பொருட்களுக்கு 
இத்தனை மதிப்பு ...
உயிருள்ள உணர்வுகளுக்கு 
ஏன் இந்த நிலை
மானுடத்தில்...????
Tuesday, August 16, 2011

இழப்பது ..???

உன்னை விட்டு ..
மனம் வெளியே 
வர மறுப்பதால் ..!!!

வேறு எதற்குள்ளும் 
புக முடியாமல் 
தவிக்கிறேன் ..!!!

இந்த தவிப்பில் ...
என்னை இலக்கிறேனா ..???
இல்லை ...
என் கவிதைகளை இலக்கிறேனா ...???

என்னகே தெரியவில்லை ..!!! தூறல் .!

நான் இறந்தாலும் ...
என் நினைவுகள் ..
உன் நெஞ்ஜோடே இருக்கும் ..!!!

மழை நின்ற பிறகும் ....
நீ நிழல் தேடும் ..
மரம் தூறுமே ..!!!
அது போல தான் .!!


Monday, August 15, 2011

தோற்பதும் பிடிக்குதே ...!!!

நான் விரும்பியே ..
தோற்கிறேன் ..!!!

உன்னிடம் மட்டும் ..

உன்னை ஜெயித்தால் ...
கிடைக்கும் ..
சந்தோஷ நொடிகளை விட...

தோற்று நாள் முழுதும் 
நினைத்து கொண்டிருப்பதே ...
மிக பிடித்திருக்கிறது  ..!!!!

Sunday, August 14, 2011

பரிட்சை ..

தூங்கா இரவுகளின் 
விடை....

தூங்கி வழிந்த 
மதியத்தில் ....

எனது விடை தாளில்.!!!!


கைபேசியே..!!

உன்னால் உலகமே ...
என் கையில் ..!!!

ஆனால் நானோ 
உலகை விட்டு 
தனி தீவாய்...!!!

உன்னால் தானே 
கைபேசியே..!!!Saturday, August 13, 2011

நானே என்னை ...

தினம் தினம்
தோற்கிறேன் ...
என்னிடமே .!

நொடி நொடியாய் 
இறக்கிறேன் ...
எண்ணங்களிடமே .!

நானே என்னை
வெறுக்கிறேன்...
காரணமின்றியே .!

தானே என்னக்குள் 
புதைகிறேன் ...
தெரியாமலே .!
உன்னோடு சண்டையிட்ட பொழுது ...

உணர்வுகளின் உளறல்களுக்கு ...
இன்றே முற்றுபுள்ளி !!!

இனி கவிதையில் 
அழுவதற்கு கூட 
வார்த்தைகளை ...
தூசுதட்ட  மாட்டேன் ..!!!


தூசு தட்டுகிறேன் ...

உன் உதாசினதிற்கு ...
நன்றி ...!!!

வெகு நாட்களுக்கு பின்
தூசு தட்டுகிறேன் ...
வார்த்தைகளை ...!!!

கவிதையில் அழுவதற்கு ..!!!
அந்த ஒரு நிமிடம்....

கண் விழிக்காத என்னை 
ஏந்திய பொழுது ...
புன்னகைத்தாய் ..!!!


முதல்முறை உன் பெயரை 
உச்சரித்தேன் ...
உச்சினுகர்ந்தாய்..!!!


 

பள்ளிக்கு செல்ல அழுவதை 
பார்த்து ...
ஆச்சர்யபட்டாய் ..!!!
பட்டதாரியாய் உன் முன்
நிற்கையில் ...
ஆனந்தமானாய் ..!!!முதல்சம்பளத்தை உன் கையில் 
கொடுக்கையில் ..
சந்தோசபட்டாய் ..!!!
மாங்கல்யம் மார்பில் விழுந்தது 
ஒருதுளி ...
கண்ணீர்விட்டாய் ..!!!அந்த ஒரு நிமிடம் 
உணர்த்தியது ...
தந்தையை ..!!!


அவர் வாழ்வின் அர்த்தமே 
நான் ...
உணர்ந்தேன் ..!!!


அந்த ஒரு நிமிடம்....!!!!!!!!

உன்னை சுற்றியே ...

நிமிடத்திற்கு நிமிடம் ...
இல்லை இல்லை !!
நொடிக்கு நொடி ...

உன்னை சுற்றியே 
என் நினைவலைகள் ...

என் கைகடிகாரம் போல்
என் கையோடே ...
இருந்திருந்தால்  கூட 
இதனை தரம் பார்த்திருப்பேனா
தெரியவில்லை ..!!!!


நீ இல்லாத பொழுதுகள் ....

யாரும் இல்லாத வனத்தில் ..
தனித்து விடப்பட்ட 
குழந்தையை போல் உணர்ந்தேன் ...
நீ இல்லாத இடத்தில் !!! அடிக்கடி பார்க்கும் கண்கள் 
மறைந்தது  ...
விரும்பி கேட்கும் உன் குரல் 
இல்லாமல் போனது ...
காரணமின்றி சிரிக்கும் 
குறுநகையை  காணோம்....

அனைத்தும் அருவருப்பாக 
தெரிந்தது ...

சரிதானே ...

நிலா இல்லாத வானம் 
என்று அழகாக இருந்தது ..???Friday, August 12, 2011

கேள்வி கணைகள் !!!!

புகைப்படம் சேர்ந்து
எடுத்தால் தான் ...
நீ என்னோடு 
இருக்கிறாய் என்று அர்த்தமா ..??

என்னை தனியாக ..
எடுத்தாலும் என்னுளே ...
நீயும் சேர்ந்து 
தானே  இருக்கிறாய் ...!!இதை எப்படி 
இந்த மரமண்டை ...
மறந்தது....???

நேசிக்க இதயம் 
கேட்டேன் ...
சுவாசிக்க இதயம்
கொடுத்தாய் ...!!

யோசிக்கிறேன்..!!!

நேசித்த இதயம்
அருகில் இல்லாமல் ..
சுவாசிப்பது எப்படி ..??


ஏன் அருகில் 
இருக்க வேண்டும் ..??

அதான் உனக்குள்ளே 
இருக்கிறேனே ..!!!


உருவகதினால் இருக்கிறாய் ...
உருவத்தினால் .....?????????

புகைபடத்திலேயே...
உனக்குள் நான் இருப்பதாய் ..
உணர்ந்த  நீ ...

ஏன் நிஜத்தில் 
ஏற்க மறுக்கிறாய் ..???


நிஜத்திற்கும் ...
நினைவுகளுக்கும் ...
உள்ள வேறுபாடை 
உணர்ந்ததால் தான் ..!!!

Related Posts Plugin for WordPress, Blogger...

உங்கள தானுங்க ...


இங்கே வந்து சென்றதற்கான கால்தடத்தை(COMMENTS) விட்டு செல்லுங்கள் ...

அதுவே என் கவிதைகளுக்கான கெளரவம் ...!!!