Monday, August 08, 2011

அப்பா...

 அப்பா... 
எனக்கு என்ன வேண்டும் ?
எனக்கு தெரிகிறதா ....
இந்த கேள்விக்கு கேள்வி குறியா ?
ஆச்சர்ய குறியா !
இதற்கே விடை தெரியவில்லையே !

நான் நீர் போல தான் !
திசை மாற நினைத்தாலும் 
திசை மாறாமல் ..!
நீ வெட்டிய பாதையே 
வடிகாலாக ...
அதில் வடிகிறேன் ..!
இல்லை இல்லை..
பெருகுகிறேன் ..!

இத்தனை வருடங்களாகியும் ...
இன்றும் உன் கைபிடித்தே நடக்கும் 
குழந்தையாகவே சுற்றி திரிகிறேன் !
என்றும் அப்படியே .....
சுற்றி திரியவே ஆசைபடுகிறேன் ..!

வேறு கை எனது கை பற்றியவுடன் 
உன் கைபிடியை விட்டுவிடுவையோ ?
இதற்கும் விடை தெரியவில்லையே ..!!!!!!!



Related Posts Plugin for WordPress, Blogger...

உங்கள தானுங்க ...


இங்கே வந்து சென்றதற்கான கால்தடத்தை(COMMENTS) விட்டு செல்லுங்கள் ...

அதுவே என் கவிதைகளுக்கான கெளரவம் ...!!!