Monday, August 08, 2011

தொலைத்து விட்டோம் ..!


தொலைத்து விட்டோம் ..!
காத்திருத்தலின் சுகத்தை ...
தொலைத்து விட்டோம் ..!

நாள் கணக்கில் 
எதிர் பார்த்து ...
மணி கணக்காக 
நினைத்து ...
சைக்கிள் பெல் சத்தம் 
கேட்டு ...
ஓடோடி சென்று 
வாங்கி ...
கடிதத்தை பிரிகையில் 
பறக்குமே ...
பட்டாம் பூச்சி அடிவயிற்றில் 
அது...
காத்திருத்தலின் சுகம் ...!

தொலைத்துவிட்டோமே !!!!

இரண்டுநிமிட SMS
தமதத்தையே ...
பொறுத்துக்கொள்ள முடியாத 
யுகத்தில் ...
எங்கே புரியும் 
காத்திருத்தலும் ...

சுகம் என்று ...!!!!!!!!!!!!

Related Posts Plugin for WordPress, Blogger...

உங்கள தானுங்க ...


இங்கே வந்து சென்றதற்கான கால்தடத்தை(COMMENTS) விட்டு செல்லுங்கள் ...

அதுவே என் கவிதைகளுக்கான கெளரவம் ...!!!