Friday, December 28, 2012

சரி ...


Thursday, December 27, 2012

என் புதிய பக்கத்தில் ....

முதல் பதிவு ....

link 

வார்த்தைகளில் வார்க்கப்பட்ட அன்பு பரிசு - முதல் பதிவாக

(என் அப்பாவிற்கு எழுதிய முதல் கடிதம் )

தங்கள் கருத்துரைகள் வரவேற்க படுகின்றன ...!!!



Tuesday, December 25, 2012

Tuesday, December 18, 2012

விடயம்...


மணிக்கணக்காக பேசும் ...
இந்த நாட்களில் ...
இன்னும் விடயம் தேடி 
அலைந்து கொண்டிருக்கிறது மனது ...
ஏன் முதல் முறை சந்தித்த பொழுது 
சிரிப்பை கூட பகிர்ந்து கொள்ள 
எத்தனிக்கவில்லை ....
இருவருமே ...!!!

Saturday, December 15, 2012

மீண்டும் ...


சில விஷயங்கள் 
வாழ்கையில் மீண்டும் 
வராது என தெரிந்தும் 
வருமா என தேடுகிறது
மனது ...
சில பயணங்களையும் தான் ...!!!


கனவுகளுக்கு ...


தூக்கம் தொலைத்த இரவுகள் ...
மிக நீளமானவை ...
ஆனால் நெருக்கமானவை ...!
கண் திறந்தே பூக்கும் கனவுகளுக்கு 
நிசப்த ராகத்தில் ஸ்ருதி சேர்ப்பவை ...!!!

Thursday, December 13, 2012

தனிமை ...




இரைச்சல் ...


இரவின் ...
நிசப்தத்தை சப்தமாய் 
நிரப்பும் எங்கோ செல்லும் 
வாகனத்தின் இரைச்சல் ...
யாருமற்ற வெறுமையை 
கவித்துவமாய் உணர்த்துகிறது ...!!!

Wednesday, December 12, 2012

பகிர்தல் ...


 சின்ன சின்ன பிடித்தல்களை 
பகிர்தலில் ...
அரும்பிய நட்பு ...
தினசரி அலுவல்களில் 
பின்னி பிணைந்த பிறகு ...
சின்ன சின்ன பகிர்தல்களை 
மறந்து விட்டோமோ ...???

உணர்த்தவா ...


என் நாளின் முக்கால்வாசி 
மணித்துளிகளில் ...
 நிரம்பி வழியும் நீ ...!

என்னை சுற்றி இருக்கும் 
வெறுமையை உணர்த்தவா ...?

எங்கோ ஒரு மூலையில் 
என்னை நினைத்து கொண்டிருக்கிறாய் 
என்பதை உணர்த்தவா ...???

Sunday, December 02, 2012

ஹைக்கூ காதல்கள் - 5


பாலில் விழுந்த ...
துளி விஷமாய் ...
கொஞ்சம் கொஞ்சமாய் 
உயிர் குடித்து கொண்டிருக்கிறது 
இந்த காதல் ...!!!

Thursday, November 29, 2012

அருகில் ...


உனக்குள் தொலைந்து போய் 
நான் என்னை தேட ...
முயற்சிக்காமல் ...
அமைதியாக உன் அருகில் 
அமர ஆசை ...!!!

Thursday, November 22, 2012

பாடல்..


தேர்வு அறையில் ...
தீவிரமாய் சிந்திக்கையில் 
திடிரென்று திரும்ப திரும்ப 
மண்டைக்குள் ஒலிக்கும் ....
ஒற்றை வரி பாடல் ...
" நீ " ...

Wednesday, November 14, 2012

நீ ...


என் கவிதைகளில் 
நிரம்பி வழியும் ...
வார்த்தைகள் எல்லாம் 
வார்த்தைகள் அல்ல ...
அதுவெல்லாம் எண்ணிலடங்கா 
நீ ...!!!

Tuesday, November 13, 2012

தோழன்...


இசையே தோழனாக ...
இருந்த நாட்களை ...
கடன் வாங்கி ...
இசையாய் மாறி போன 
தோழன் நீ ...!!!

Sunday, November 04, 2012

தண்டனை ...


என்னையும் என் தவறுகளுக்கும் ...
சேர்த்து சிலுவை சுமக்கும் ...
உன் தோள்களில் ....
தவறியேனும் தவறுகள் 
செய்யாமல் ...
என்னை மட்டும் சுமக்கும் 
தண்டனை ...
போதுமென்று தீர்பெழுத 
முயற்சிக்கிறேன் ...!!!

Sunday, October 14, 2012

ஹைக்கூ காதல்கள் - 4


வெகு அருகில் இல்லை ...
நீ சுவாசிக்கும் சப்தம் 
கேட்கும் தொலைவில் ...
அமர்ந்தால் போதும் ...!!!


வெகு நேரம் இல்லை ...
 கண் சிமிட்டல் 
இடைவெளி விடுத்து ...
பார்த்தால் போதும் ...!!!


மணி துளிகள் கரைய 
அமைதியாய் அமர்ந்திருக்க ...
சட்டென என் முடிகோதும் 
உன் கைகளுக்காகவே ...
மௌனத்தில் தொலைகிறேன் ...!!!

Saturday, October 13, 2012

மொழி ...


நினைவுகளை வெளி கொணர்ந்தால் ....
என்ன மொழி பேசும் ...???

மொழி அறிந்தால் ...

சோக கீதமாய் சினுங்குமா ...?
சந்தோஷ ராகமாய் பறக்குமா ...?


Thursday, October 11, 2012

நான் ... நீ ...


விடாமல் பேசும் நான் ...
விட்டு விட்டு உம் கொட்டும் நீ ...

எல்லாவற்றையும் சொல்லும் நான் ...
எதையும் மறக்கும் நீ ...

உன்னை நச்சரிக்கும் நான் ...
என்னை மட்டும் பொறுத்துக்கொள்ளும் நீ ...

எல்லாவற்றிற்க்கும் அழும் நான் ...
எனக்கு மட்டும் அழும் நீ ...

எதற்கும் அதிகமாய் யோசிக்கும் நான் ...
தேவைக்கு மட்டும் யோசிக்கும் நீ ...

என்னை முழுதாய் புரிந்து கொண்ட நீ ...
உன்னை புரிந்தும் புரிந்து கொள்ளாத நான் ...

இதில் மட்டும் உனக்கு பின் நான் ....!!!!

Sunday, October 07, 2012

நிலவோடு ...


ஜன்னல் வழி
எட்டி பார்க்கும் ...
நிலவோடு ...

சற்றே நிதானமாய் 
ஓடி பிடித்து ...
விளையாடுகிறது ...

உன் நினைவுகள் ...!!!

Friday, October 05, 2012

சர்வாதிகாரி ...


கீறலாய் தோன்றி 
மின்னலாய் மாறி போன நீ ...

இதயத்தின் ஆழங்களில் 
புதைத்து பார்த்தும் 
வெளிவர தயாராய் ...

பிறை நிலவு முழு நிலவாக 
துடிப்பதை போல் ...

நுழைவு சீட்டின்றி உள்புகுந்து 
போர் தொடுக்காமல் ...
சிம்மாசனம் ஏறிய 
சர்வாதிகாரி ...!!!

Wednesday, October 03, 2012

நினைவுகள் ...



எங்கு சென்றாலும் 
பின் தொடராமல் ...

திடிரென்று குதிக்கும் 
திருட்டு பூனையாய் ...

வந்து விடுகிறது 
உன் நினைவுகள் ...!!!

Monday, October 01, 2012

வரம் ...



புல்வெளியின் அனுமதி 
பெறாமலே அழகு சேர்க்கும் ...
பனியாய் ...

வினா எழும் முன் 
விடையாய் முந்திக்கொண்டு 
வந்தவன் ...

நான் கேட்காமலே 
தரப்பட்ட வரம் ...
நீ ...!!!

Saturday, September 29, 2012

அன்பை பொழிய ...


கோபத்தில் அருவியாய் 
விலகினாலும் ...

மறுநொடியே ஆறாய் 
அன்பை பொழிய ...

விலகிய வேகத்திலே 
வந்து விடுகிறாய் ...!!!

Tuesday, September 18, 2012

நீ ...


காரணமே இல்லாமல் 
சிரிக்க ....
காரணம் நீ ....!!!

என் கண்ணீர் துளிக்குள் 
விழுந்த ....
சமுத்திரம் நீ ...!!!

Sunday, September 16, 2012

உன்னையும்...


எங்கேயும் ஓடிவிடாமல் 
சிறு பூனையை ...

பெட்டிக்குள் பூட்டி 
வைத்திருப்பதை போல ...

பத்திரமாக வைத்திருக்கிறேன் 
நம் நினைவுகளை ...!!!

உன்னையும் சேர்த்து தான் ...!!!

Wednesday, September 05, 2012

தருணங்கள் ...

 சில உறவுகளில் ...
நம்மை நாமே 
தொலைத்து  போன 
தருணங்கள் ...

காதுக்குள் ஒலிக்கும் 
இசையாய் ...
நமக்கு மட்டும் 
நெய்ய பட்ட பாடலாய் ...!!!

Monday, September 03, 2012

புரியாமல் ...

 
ஹெட் போன்ஸ் முடிச்சுகளை 
போல் ...
எப்படி உருவானது என்றே 
புரியாமல் ...
பயணித்து கொண்டிருக்கிறது 
நம் நட்பு ...!!!

Saturday, September 01, 2012

எப்படியோ ...


எதேச்சையாக செய்த ...
சின்ன சின்ன சம்பாஷனைகள் 
எப்படியோ ஒட்டிகொண்டது ...
பெரிய பெரிய நினைவுகளாக ...!!!

ஹைக்கூ காதல்கள் - 3

வலிக்காத கால் விரல் 
சுடக்குகள் ...
உன் கைகளாலா ...
இல்லை காதலாலா ..???
தொலைந்து போக துடிக்கிறேன் 
உன் இதய துடிப்பாக ...
மட்டுமே ...!!!
என் கை விரல்களுக்கு 
கண்ணாம்பூச்சி விளையாட 
கற்று கொடுத்த கிறுக்கன் நீ ...!!!

என் இதழ்களுக்கு 
மௌன பாஷை புகட்டிய 
குரு ----> காதல் ...!!!!


ஒரு குடைக்குள் இருவர் ...
பாதி நனைந்து ...
முழுதாய் நனைந்தோம் 
காதலில் ...!!!

Tuesday, August 28, 2012

உயிர் ...


உன் உயிரின் வாசத்தில் 
மணக்கும் கவிகள் ...
உன் வாசிப்பில் உயிர் 
பெறத்துடிக்கிறது ...!!!

Thursday, August 23, 2012

நிதர்சனம் ...


கண்கள் சந்தித்து கொள்ளும் 
தருணங்கள் பாஷையாக 
வெறுப்பு பரிமாறப்படலாம் ...

வார்த்தைகள் வரும் முன் 
தயக்கம் முந்திக்கொண்டு 
முகம் பார்க்காமல் சென்றிடலாம் ...

எங்கிருந்தாலும் எங்கோ
ஓரமாய் வலி தரும் 
சோகங்களாக மாறிடலாம் ...

நினைவுகளின் மடுவில் 
அமர்ந்து அழுகதூண்டும் 
ரணங்களாகி விடலாம் ...

என்றைகாவது ஒருநாள் 
தவறியேனும் நினைத்திட கூடாது 
என தீர்க்கமாகலாம் ...

எங்குமே வரையறைகள் 
தகர்ந்திடும் பொழுது ...!!!



Wednesday, August 22, 2012

புனிதமானது ...


காதல் வென்று ...
காமம் கொன்று ...
எஞ்சி நிற்கும் 
ஆண் - பெண் நட்பு ...
புனிதமானது ...!!!!



Tuesday, August 21, 2012

சிலர் ...



Monday, August 20, 2012

ஹைக்கூ காதல்கள் - 2


காதல் மழையால் 
மண்வாசனையாய் ...
மாறி போன நீ ...!!!


தோகை விரித்தாடும் 
மயிலாய் மனம் ...
உன் வருகையால் ...!!!


கன்னத்தில் முத்தம் கேட்டால் 
காது மடல் முத்தம் ...
பரிசளிக்கும் கள்வன் நீ ...!!!


என் கை சிறையில் 
இருக்கும் அலைபேசியின் ...
மறுமுனை செல்லகைதி நீ ...!!!


ஒற்றை புன்னகை ...
காவியமாகும் 
காதலில்...!!!
Related Posts Plugin for WordPress, Blogger...

உங்கள தானுங்க ...


இங்கே வந்து சென்றதற்கான கால்தடத்தை(COMMENTS) விட்டு செல்லுங்கள் ...

அதுவே என் கவிதைகளுக்கான கெளரவம் ...!!!