Thursday, January 26, 2012

எழுத்து பிழை...


என் கவிதைகளில் ...
எழுத்து பிழைகளையே ...
நான் ரசிக்கிறேன் ...
வாசிக்கையில் ...
உன் கையெழுத்தில் 
நீ சரி செய்வாயே ...
அதற்காகவே ...!!!

Saturday, January 21, 2012

ரகசியமாய் ...

வேண்டும் என்றே 
தண்ணீர் கொடுக்கையில் ...
தெரியாமல் கையை தொட !

உணவு பரிமாறுகையில் ...
உனக்காகவே பத்திரபடுத்திய 
பதார்த்தத்தை வைக்க !

எவ்வளவு வேலைகள் இருந்தாலும் 
உன்னை பார்த்தவுடன் ...
சிரிக்காமல் சிரிக்க !

வெளியே கிளம்புகையில் ...
யாரும் அறியாமல் போய்வருகிறேன் 
என்று பாஷை பரிமாற ...

இதற்காக வேணும் வேண்டும் 
கூட்டுகுடும்பம் ...!!!!


அருமை...

காலை வேளை....
இழுத்து சொரிகிய மடிப்பும் ...
முந்தானை கை துடைக்கும்  துணியாக ...
வியர்வை வலிய ...
அவசரம் அவசரமாக ...
சம்படத்தில் மதியத்திற்கு  ...
தட்டில் இருக்கும் காலை உணவை 
உன் வாயில் திணித்து விட்டு  ...
ஈர தலையை வாரி விட்டு...
கைக்குட்டை கூட பாக்கெட்டில் சொருகி ..
வாசல் வரை சென்ற பின் ...
உன் பின்னே ஓடி வந்து ...
டை கட்ட மறந்துட்ட இந்தவென்று ...
கொடுத்து விட்டு திரும்புகையில் ...
" அம்மா தேங்க்ஸ் " என்று 
பள்ளி பேருந்திற்கு சிரித்து கொண்டே 
ஓடுவாயே ...
அப்போது தெரியும் ...
என் தாயின் அருமை எனக்கு ...!!!!
Saturday, January 14, 2012

நீ ...நீ பேசிக்கொண்டே இருந்தால்
உம் கொட்டி ரசிக்கத் தோன்றும் !
நீ மௌனம் காத்தால்
பேச்சில் கலைக்கத் தோன்றும் !

நீ நடந்து சென்றால்
பின் தொடரத்  தோன்றும் !
நீ நின்று விட்டால் 
உன்னோடு நடக்கத் தோன்றும் !

நீ தோள் மீது சாய்ந்தால்
முடி கோதத் தோன்றும் !
நீ நிமிர்ந்து அமர்ந்தால்
உன் மீது சாயத் தோன்றும் !

நீ கை பிடித்தால்
ஸ்பரிசம் உணரத் தோன்றும் !
நீ விலகிச்சென்றால்
உன் கைபிடிக்கத் தோன்றும் !

நீ சண்டை போட்டால்
சமரசம் செய்யத் தோன்றும் !
நீ தொலைவில் சென்றால்
சண்டை போடத் தோன்றும் !

நீ அடம்பிடித்தால் 
விட்டு கொடுக்கத்  தோன்றும் !
நீ வேண்டாம் என்றால்
அடம் பிடிக்கத் தோன்றும் !

நீ தூங்கி கொண்டிருத்தால் 
ரசிக்கத் தோன்றும் !
நீ கஷ்டப்பட்டால் 
தூங்க வைக்கத் தோன்றும் !


இதில் நீ மட்டும் எனக்கு 
கனவாகி போன கனவு ...!!!மடல் ...


என் சாக்லேட் தின்றுவிட்டு 
உன்னிடம் பிடுங்க வேண்டும் ... !

ஒரு இருக்கைக்காக இருவரும் 
மல்யுத்தம் செய்ய வேண்டும் ... !

தொலைகாட்சி நிகழ்ச்சி பார்க்க 
ரிமோடிற்கு சண்டையிட வேண்டும் ... !

அம்மாவின் பாசம் யாருக்கு அதிகமென்று 
பட்டிமன்றம் வைக்க வேண்டும் ... !

அப்பாவிடம் தவறுகளை சொல்லி 
உன்னை மாட்டிவிட வேண்டும் ... !

மும்மரமாய் நீ படிக்கையில் 
உந்தன் தலையில் குட்ட வேண்டும் ... !

ஆகமொத்தத்தில் ...

இது இல்லாத அண்ணனுக்கான 
மடல் ... !

வகுப்பறை அண்ணனுக்கான 
சமர்ப்பணம்... ! 

கண்ணீர்...


வாஞ்சையுடன் உன்னை பார்த்தேன் ...
வெறுமை மட்டுமே உந்தன் 
கண்களில் ...
ஏனோ தெரியவில்லை 
கண்ணீர் கோர்த்துவிட்டது என்னில் ... !

வாழ்கையை ...


ரசிக்கிறேன் ...
வாழ்கையை ...
அணுஅணுவாக
அங்குலம் அங்குலமாக
நொடிக்கு நொடி
உன்னை சந்தித்த பின் ...!!!

உன்னால் ...


உயிரற்றதும் உயிர் பெறுகிறது ...
உன்னோடு இருக்கையில் அல்ல ..!!!
என் தனிமையில் ...
டெடிபியர் கதைகள் பேசுதே 
தலையணை உரிமை சண்டையிடுதே 
புத்தகம் தோள் கொடுக்குதே 
டைரி ஆறுதல் கூறுதே 
கண்ணாடி என்னோடு சிரிக்குதே 
பேனா மௌன அஞ்சலி செலுத்துதே
செல்போன் செல்லமாய் சினுங்குதே 
உன்னால் ...!!!

பக்தன் ...

செருப்பை வெளியில் விட்டு 
கோவிலுக்குள் செல்லும் 
பக்தனை போல் ஆகிவிட்டேன் ...
உன்னை பிரிகையில் ...!!!கரைகிறேன் ...

மணித்துளிகளை 
கரைப்பதற்கே ...
கவிதையில் 
கரைகிறேன் ...


பாஷை


கண்சிமிட்டலும் பாஷை தான் ...
ஸ்பரிசமும் பாஷை தான் ...
பாஷை களற்ற புரிதலில் ...!!!!

தனிமையில் ...


தனிமையில் என்னை 
தொலைக்க கற்று கொண்டேன் ...
உன்னுள் தொலைந்த பின் ...!!!!


வீடு ...

எந்தன் வீட்டில் ...
இன்னொரு வீடு ...
எறும்பின் புற்று ...!!!


தற்கொலை ...

தனக்கு தானே வினவி ...
தானே விடை ஆகும் ...
தைரியமான கோழைத்தனம் ...
தற்கொலை ...!!!!


ஆசிர்வாதம் ...

காதல் தேவதைகள்
அசிர்வதித்தாலே ...
பேனாவில் கவிதை
சொட்டுமாம் ...!!!
நானோ உன்னால்
ஆசிர்வதிக்கப்பட்டவள் ..!!!

Friday, January 13, 2012

மொழிபெயர்ப்பு ...


என் வார்த்தைகளின் கனத்தை 
வைத்தே ...
என் மனதை வாசிக்கும் 
 நீ ... 
என் மௌனங்களையும் சரியாகவே 
மொழிபெயர்கிறாய் ...!!!


உலகம் ...


எப்போதெல்லாம் எழுத 
தோன்றுகிறது ...
பட்டியலிட முயற்சித்தேன் 
பாடல் வரிகளை தான் 
மனம் முணுமுணுத்தது ...
"உன்னக்குள் தொடங்கி உன்னக்குள் 
தானே எந்தன் உலகம் முடிகிறதே "
அது போல தான் ...
என் கவிதை உலகமும் ...!!!

Friday, January 06, 2012

எனது கவிதை ...


கருவாய் உருவாகிறது 
உன் நினைவுகளில் ...
பிறப்புசான்றிதல் வாங்குகிறது 
உன் கண்சிமிட்டலில் ...
சுவாசம் பெறுகிறது 
உன் சிரிப்பினில் ...
யாகம் வளர்கிறது 
உன் வார்த்தைகளில் ...
சங்கீதமாய் ஒளிகிறது 
உன் வாசிப்பில் ...
முராரி வாசிக்கிறது
உன் சண்டைகளுக்கு ...
யாசகம் கேட்கிறது 
உன் சமாதானத்திற்கு ...
வெவ்வேறு காரணங்களுக்கு 
ஜனித்தாலும் ...
காவியமாய் உருகுவது 
உனக்காகவே ....!!!

சங்கீதம் ...


ஸ்வரம் ராகம் ...
கவிதையில் தாளம் ...
முடிவில்லா சங்கீதம் ...
நம்மை போல் ...!!!

புல்லாங்குழல் ...


புல்லாங்குழலாய் நம் நட்பு ..
மூங்கிலில் துளை இடாமல் 
ஸ்வரம் பிறப்பதில்லை ...
சிறு சண்டைகள் இல்லாமல் 
புரிதல் ஏற்படுவதில்லை..!!!


Related Posts Plugin for WordPress, Blogger...

உங்கள தானுங்க ...


இங்கே வந்து சென்றதற்கான கால்தடத்தை(COMMENTS) விட்டு செல்லுங்கள் ...

அதுவே என் கவிதைகளுக்கான கெளரவம் ...!!!