Saturday, February 25, 2012

அதிகம்...


எனக்கு உன்னிடம் ...
அனைத்துமே அதிகம் தான் ...
அன்பு ...
உரிமை ...
கோபமும் தான் ...!
ஆனால் பாஷை தெரியா 
குழந்தையாய் ...
வெளி கொணராமலே 
இருந்து விடுகிறேன் நான் ..!!!

சில்லறை ...


என்றோ எதேச்சையாக ...
எங்கோ சில்லறை மாற்றுகையில் ...
வேற்று நாட்டின் சில்லறை ...
கைக்கு கிட்டியது ...
எதிர் பாராமல் இப்படி ...
ஏதேனும் கிடைத்தால் ...
மனம் குதூகளிக்கும்...
வெகு நாட்கள் பத்திரமாக 
வைத்திருந்தேன்...!
ஆனால் அதுவோ என் மனதை 
நெருடி கொண்டே இருந்தது ...
என்றோ ஒரு நாள் ...
நீ என்னை எழுத சொன்னாய் ...
ஈழத்து சகோதர சகோதரிகளை பற்றி ...
அதை பார்க்கும் பொழுதெல்லாம் 
என்னென்னவோ தோன்றியது ...
வார்த்தைகளில் கொணர முடியவில்லை ...
ஆம் இலங்கை நாட்டின் 
ரூபாய் தான் அது ...!!!!

கடன்...
என் கவிக்கு ...
உயிரூட்டவே ...
உன் மூச்சு காற்றை 
கடன் கேட்கிறேன் ...!

குளிரிலும் ...


ரயில் பயணத்தில் ...
குளிர் சாதன பெட்டியில்
தனியே பயணிக்கையில் ...
கண்ணாடி ஜன்னல் தொடுகிறேன் 
குளிரிலும் ...
உன் கன்னம் வருடும் 
இதமான சூடையே உணர்கிறேன் ...
உன்னுள்ளே கிறங்கி இருப்பதால் ...!!!

Friday, February 03, 2012

நீயே ...


நான் ...
வாசிக்கும் கவிதைகளின் 
வார்த்தைகளாய் ...
கேட்கும் பாடலின் 
இசையாய்...
பார்க்கும் படங்களின் 
நாயகனாக ...
ரசிக்கும் ஓவியத்தின் 
வண்ணமாக ...
வரையும் கோலங்களின்
புள்ளியாக ...
ஓசைபடாமல் நடக்கையில் 
கொலுசொலியாக...
பயணிக்கையில் பின்னோக்கி செல்லும் 
மரங்களாக ...
தூங்குகையில் கைக்குள் 
தலையணையாக ....
இப்படி ஒவ்வொன்றிலும் 
நீயே உரு பெறுகிறாய் ...!!!

அறுபதுகளில் ...


சாயுங்காலம் ...
தேரை போல் அசைந்து 
கையில் தடியோடு ...
நடக்கையில் ...
அப்பொதும் கை பிடிக்க தடை !
ஒரு அடி இடைவெளியில் தொடர்வோம் ...
கோவிலுக்குள் பிரவேசித்து ...
கை எடுத்து கும்பிட்டு ...
நெற்றியில் திருநீறு இடுகையில் 
ஊதி விடுவாய் ...
அமைதியாக இருவரும் ...
கருவறை சுற்ற ...
வெளி பிரகாரத்தில் அமர்ந்து 
தியானித்து ...
இருவரும் வீடு திரும்புகையில் 
ஒரு விதமான ஆத்மதிருப்தி 
குடிகொள்ளும் ...
இப்படி மௌனமாகவே நாட்கள் 
நகர்ந்தாலும் ...
மெல்லிய இழையோடிய புரிதல் 
நமக்குள் மட்டுமே ...!!!

விம்மல் ...


நீ இல்லாத பொழுதுகள் ...
ஏனோ வெறுமையை 
உணர்த்தவில்லை இம்முறை ..!!!
வெறுமையை கடந்த ...
ஒரு விதமான விம்மல் 
வார்த்தைகளில் சொல்லிவிட 
முயலுகிறேன் ....
தோல்வியே தழுவுகிறேன் ..!!!

முதல் ரசிகன் ...

எதை எதையோ ...
கிறுக்கி கிறுக்கி ...
கவியாக்கும் 
எனது முயற்சியில் ...
எனக்கு கிடைத்த 
முதல் ரசிகன் 
நீ ..!!!

நட்பு...கோவில் சிலையின் பாதத்தில் ...
விழுந்தாலும் ...
கல்லறையின் மேல் தூவ 
பட்டாலும் ...
பூக்கள் பூக்கள் தான் ... !!!
அது போல் என்றுமே 
நம் நட்பு நட்பு தான் ...!!!

ரசிக்கிறேன் ...

நீ ரசிக்கிறாய் ...
என்பதற்காகவே 
நானும் பலவற்றை 
ரசிக்கிறேன் ...!!!
முடிவில் யோசித்தால் 
ரசித்ததை விட 
உன்னை நினைத்தது 
தான் அதிகம் ...!!!!
Related Posts Plugin for WordPress, Blogger...

உங்கள தானுங்க ...


இங்கே வந்து சென்றதற்கான கால்தடத்தை(COMMENTS) விட்டு செல்லுங்கள் ...

அதுவே என் கவிதைகளுக்கான கெளரவம் ...!!!