Sunday, April 29, 2012

கவிதை கவிதை...
கவிதையாய் கவிதை 
சொல்ல ...
கவிதையில் கவிதை 
செய்து ...
கவிதையிடம் கவிதை 
காட்ட ...
கவிதையோட கவிதை 
அழகு ...
என்றாய் கவிதையாய் .!

Saturday, April 28, 2012

பதில் ...

உளறாதே 
புரியும்படி 
புலம்பு ...

என் 
கவிக்கான
பதில் ...

சந்தோசமாய் 
புலம்புகிறது 
மனம் ...

நீ 
கோரியதால் ...!!!

ரகசியம் ...


என் தேடல்களில் ..
எனக்கே புலப்படாமல் ...
என்னிடம் சேர்ந்து ...
எனக்குள் இடம்பெயர்ந்த ...
எனக்கு மட்டுமான ...
ரகசியமான ரகசியம் 
நீ ..!!!

சுமை ...


சுதந்திரமும் 
சுமையாகிறது ...

தனிமையை 
 உணர்கையில் ..!!!


சமம் ...


யாரும் யாருக்கும் 
சளைத்தவர்கள் இல்லை
ஆணும் பெண்ணும் ...
சமம் தான் 
எதில் இருக்கிறார்களோ 
இல்லையோ ...
இதய கூட்டில் 
கல்லெறிவதற்கு ...
தயாராக ..!!

பாரங்கற்களுடன் ..!!!

நீ ...

என்னுடன் நான் 
இருக்கும் ...
நிமிடங்களை 
எல்லாம் 
கலவாடிவிட்டாய் ..!!! 

Sunday, April 22, 2012

யுத்தம்...


நானும் நீயும் 
மௌனமாகவே 
யுத்தம் புரிந்தோம் 
யார் முதலில் 
மௌனத்தை 
கலைப்பதென்று..
யுத்தம் முடிவுற்றதும் 
மௌனமே மொழியாக 
உருபெற்றது ..!!!

Saturday, April 21, 2012

பிடிக்கும் ...பின்னிரவு தூங்கி 
அதிகாலை எழும்ப 
பிடிக்கும் ...

பாவக்காய் வாயில் வைத்து 
கசப்பை கண் மூடி ருசிக்க 
பிடிக்கும் ...

சந்தோஷ கீற்றை அசைபோடுகையில் 
சோக ராகம் கேட்க 
பிடிக்கும் ...

வெற்றுவானில் இல்லை என 
தெரிந்தும் பிறைநிலவை தேட 
பிடிக்கும் ...


அமைதியாய் பேசுகையில் 
சத்தமாய் சிரிக்க 
பிடிக்கும் ...

தூக்கம் தொலைத்து 
புத்தகத்தில் தொலைய 
பிடிக்கும் ...

முடி முளைக்க தொடங்கும்
மொட்டை தலையை வருட 
பிடிக்கும் ...

எழுத்தாளனின் வரிகளில் கிறங்கி 
வழியும் கண்ணீர் 
பிடிக்கும் ...


கால்மேல் கால் போட்டு 
திமிராய் அமர 
பிடிக்கும்...

பகிர முடியாததை 
கவிதையில் வடிக்க 
பிடிக்கும் ...


ஓரடி இடைவெளியில் 
நடக்கும் காதலர்களை பார்க்க 
பிடிக்கும் ...


அடித்த அன்னையையே 
கட்டிபிடித்து அழும் குழந்தை 
பிடிக்கும் ...


பிடிக்காததை சட்டென்றும்  
பிடித்ததை யோசித்து சொல்லும் மனம் 
பிடிக்கும் ...

என் உன் ...


என் கூந்தலில் சொட்டும் 
நீர் துளியில் 
உன் காதல் ரசம் 
சொட்ட வேண்டும் ...!

என் பாஷையில்லா 
மௌனத்தை 
உன் காதல் மொழி 
பேச வேண்டும் ...!

என் கஷ்டங்களை 
கண்களினூடே 
உன் காதல் பார்வை 
அறிய வேண்டும் ...!

என் காதலை 
கடந்து 
உன் காதல் 
மிஞ்ச வேண்டும் ...!நண்பர்கள்...


ஆயிரம் ஆயிரம் 
சம்பாஷனைகள் ...
யாரும் அறியா 
ரகசியங்கள் ...
சின்ன 
சண்டைகள் ...
செல்ல 
சமாதானங்கள் ...
அத்தனைக்கும் ...
உயிரூட்டியது வகுப்பறை ...
எத்தனையோ தரம் 
சொல்லி இருப்போம் 
" நாம் பிரிந்தால் என்ன 
நாம் இப்பொழுது இருப்பதை
போலவே தான் இருப்போம் "
ஆம் இப்பொழுதும் அதே 
நண்பர்கள் தான் ...
கடந்த கால ...
உற்ற நண்பர்கள் தான் ..!!
எத்தனை பெரிய ஏமாற்றம் 
அடி மனதில் ரணமாய் ...
காலத்தால் தோல் அழிந்து 
நட்பின் சாட்சியாய் ...
அனைவரிடமும் எஞ்சி இருப்பது 
நினைவு எலும்புகூட்டின் 
மிச்சமே ....
இப்படி நிதர்சனத்தை 
அனுபவித்தும் ...
அடுத்த எலும்பு கூட்டை 
சுமப்பதற்கு தயாராகிறேன் ...
கல்லூரியில் ...!!!!

கவிகள் ...


அளப்பெரிய ...
குறிஞ்சி மலராய் 
எனக்கு மட்டுமான 
உன் நட்பால் ...
நிரம்பி வழியும்
பேழையால் ...
உனக்கு மட்டுமே 
என் கவிகள் 
கதைக்கும் ...

கண்ணாம்பூச்சி ...


எனக்கு தெரியாமல் 
நீயும் ...
உனக்கு தெரியாமல் 
நானும் ...
கண்ணாம்பூச்சி 
விளையாடுவதால் ...
எனக்கான உன் அன்பும் 
உனக்கான என் நட்பும் 
பொறமை கொள்கிறது ...
இவர்களாக நாம் இல்லையே 
என்று ...
அன்பிற்கும் நட்பிற்குமே 
பொறாமை என்றால் ...
மனிதர்களுக்கு புலபட்டால் ...???

எதற்கு ......உன்னோடு பேசலாமா 

வேண்டாமா ????
எதற்கு ...
மனதில் 
அத்தனை நாட்கள் 
பட்டிமன்றம் 
நடந்தது ...
என்னை நானே 
தேடும் இந்நாட்களில் ..
புரிகிறது ...!!!!!

ரசிகை ...


எனக்கு நானே 
அந்நிய படுவாதாய் ...
தோன்றுகிறது ..
இந்த 
ரசிகனின் ரசிகை 
ஆன பின்பு ..!!!

மௌனம்...


மொழிபெயர்ப்பு அகராதி 
எழுதும் அளவிற்கு ...
என்னை பயிற்றுவித்துவிட்டாய்
மௌனம் மட்டும் மொழியாக 
அங்கீகரிக்கபட்டால் ..!!!

நண்பனே ....


உன்னோடு பேசுகையில் 
நான் வெட்கப்படுவதை 
பார்த்து ...
உன்னோடு பேசுவதால் 
வெட்கப்படுகிறேன் 
என்று சுற்றம் கருத ..
நீ என் வருங்கால 
கணவரை பற்றி 
கேட்டதால் ...
வெட்கப்படேன் 
என்று யாருக்கு தெரியும் 
நண்பனே ....
நாம் கூறாமல் ...!!!

தூரம் ...


லனமின்றி ஓலமிடும் 
மனதிற்கு ...
எப்படி சொல்வேன் 
அருகருகே இருந்தும் 
மாற்று பாதையில்
பலமைல் தூரம் 
பயணித்து விட்டோம் 
என்பதை .... 

ஏன் ???


என் 
எண்ணங்கள் கூட
வார்த்தைகள் எதிர்பார்கிறது 
கவியாய் உரு பெற ...
ஏன் ???
நீ மட்டும் என்னிடம் 
எதிர்பார்ப்புகளற்று 
கவியாகிறாய்...!!! 

வெட்கம் ...


எனக்கும் வெட்கம் வரும் ...
மஞ்சள் பூச்சையும் மீறி 
சிவந்த கன்னம் 
காட்டி கொடுத்துவிட்டது ...
நீ எனக்கு ...
உன் விரல் தீண்டாமல் 
தாலி கட்டுகையில் ...!!!!

Friday, April 20, 2012

முதல் காதல் ...


உன்னோடு யுத்தம் 
செய்யவில்லை ...
உன் முதல் காதலி 
நானல்ல என்று 
உணர்ந்த பொழுது !

உன்னோடு தர்க்கம் 
செய்யவில்லை ...
உன் காதல் மொத்தமும் 
எனக்கல்ல என்று 
தெரிந்த பொழுது !

உன்னோடு விவாதம் 
செய்யவில்லை ...
உன் முதல் காலடித்தடம் 
என்னோடல்ல என்று 
அறிந்த பொழுது !

உன் முதல் காதலால் 
என் முதல் காதலை 
காயபடுத்துவதை விட 
உன் இறந்து போன 
காதலையும் காதலிப்பேன் ..!!!

Thursday, April 05, 2012

போகாதே ....


பயணப்படும் தூரம் 
உணர்த்தவில்லை ...
உன் பிரிவை ..

கை பற்றும் அழுத்தம் 
உணர்த்தி விட்டது 
நீ விலகி செல்வதை ..!!!

Related Posts Plugin for WordPress, Blogger...

உங்கள தானுங்க ...


இங்கே வந்து சென்றதற்கான கால்தடத்தை(COMMENTS) விட்டு செல்லுங்கள் ...

அதுவே என் கவிதைகளுக்கான கெளரவம் ...!!!