Thursday, May 31, 2012

நினைவுகள் ...


 இருளில் தாளம் 
 தவறி பிறக்கும் 
கவிகளுக்கு ...

தவறாமல் 

ராகம் வாசிக்க 
வந்துவிடுகிறது ...
உன் நினைவுகள் ...!!!

Tuesday, May 29, 2012

காரணம் ...


யாராயினும் ...
ஒரே ஒரு 
காரணம் தான் ...
எதை எதையோ 
தேடி செல்ல ...
பிடித்தவர்களின் 
பிடித்தளுக்காக ...!!! 

Sunday, May 27, 2012

சாராம்சம் ...


எல்லை தாண்டிய 
அன்பும் ...

எல்லை தாண்டா 
நாமும் ...

நம் நட்பின் 
சாராம்சம் ...!!!

Saturday, May 26, 2012

நீர் துளி ...


அழகாய் தோன்றுகிறது 
நீர் துளி ...
அழுகையின் போது 
கண் இடுக்கில் ...!

ஆழமாய் தடம் 
பதிக்கிறது கன்னத்தில் ...
அமுதமாய் விழுகிறது 
உன் தோள்களில் ...!

Friday, May 25, 2012

மாற்றம் ...


எவ்வளவு பெரிய 
கோலமாயினும் ...
புள்ளியில் தொகை 
மாற்றம் ...
கோலம் அலங்கோலம் .!

எவ்வளவு நெருக்க 
உறவாயினும் ..
நம்பிக்கையில் சிறு 
மாற்றம் ...
உறவு உருக்குலைவு .!

Thursday, May 24, 2012

சிறை...


எல்லை வகுத்து கொள்ளாத 
காற்றாய் சுற்றி திரிந்தேன் ...

உன் நுரையீரல் சிறையில் 
சிக்கி தவித்தேன் ..

சுதந்திரம் கிடைத்தும் 
தவிக்கிறேன் சிறைக்காக ..!!!

Wednesday, May 23, 2012

பொறியியல் கல்லூரி ...



பட்டாம்பூச்சிகளின் நிறத்தை 
களவாடி ...

சாயப்பட்டறைகளுக்கு  பேரம் 
பேசப்படுகிறது ...!!!

இதயத்தில் ...


என் தாயின் 
கருவறையில் இருந்து 
வந்தவள் அல்ல ...
இதயத்தில் இருந்து 
பிரசவிக்க பட்டவள் ...!!!

என் தந்தையின் 
விந்தில் விதைக்க 
பட்டவள் அல்ல ...
இதயத்தில் இருந்து 
வேர் விட்டவள் ...!!!

இப்படிக்கு ...
தாய் தந்தையை 
கடனாய் பெற்ற 
தத்து பிள்ளை ...!!!


Friday, May 04, 2012

நொடிகள் ...


மங்கலான மாலை ...
பாதி தூக்கம் ...
தேநீர் கோப்பை ...
கொஞ்சம் இசை...
உன் நினைவுகள் ...
நொடிகள் கவிதையாய் ...!!!
Related Posts Plugin for WordPress, Blogger...

உங்கள தானுங்க ...


இங்கே வந்து சென்றதற்கான கால்தடத்தை(COMMENTS) விட்டு செல்லுங்கள் ...

அதுவே என் கவிதைகளுக்கான கெளரவம் ...!!!