Saturday, June 30, 2012

நாட்கள்...


ஒரு நிமிட இருட்டும் 
பயமாய் நெஞ்சில் பாய்ந்த 
நாட்கள் ...

ஒருவரும் இல்லா இரவு 
கனவில் கூட நடுங்க 
வைத்தது ...

இன்று ஒருவரும் இல்லாத 
முழு இரவும் இருட்டில் 
தலையனையோடு ...

இருக்க பழகிவிட்ட எனக்கு 
நீ இல்லாத நாட்களும் 
பழகிக்கொள்ளும் தானே ...!!!

விடுதி...எனக்காக நான் மட்டுமே 
இருக்கும் இந்த வனவாசத்தில் ...

என் பாதை மறந்து 
பயணிக்கிறேன் என்று உரைத்தும் ...

உணராமலே ஊர்ந்து கொண்டிருக்கும் 
என்னை மீட்டெடுக்க யாரேனும் ...

வருவார்களோ என்று எண்ணம் 
சற்றே எட்டி பார்கையில் ...

அதற்கு வெகு முன்பாகவே 
என் கன்னம் நினைத்து
விடுகிறது இந்த கண்ணீ்ர்...!!!

Friday, June 29, 2012

அதிர்வால்...


உன் நினைவுகளின்
அதிர்வால்...
என் மனம்
உளறுகிறது...
கவிகளாக ...!!!

நொடிகளை...எனக்கே எனக்கான
இந்த நொடிகளை
அனுபவித்து கொல்வதற்கு
பதிலாக...
கொன்று அனுபவிக்கிறேன்...!!!

அறியாமலே...எதற்காக அழுகிறோம்...
என்று அறியாமலே...
அழுவது கூட...
சுகம் தான்...!!!

முயற்சிகள்...முற்று பெறாத
தற்கொலைகளாகவே...
முடிகிறது என்
முயற்சிகள்...
எதிலுமே...!!!

காதலால்...காதலனாவதும்...
காதலியாவதும்...
காதலிப்பதும்...
காதலிக்கபடுவதும்...
காதலாவதும்...
காதலால் மட்டுமே...!!!

Thursday, June 28, 2012

உலகம்...ஆண்கள் இல்லாத ...
அழகான உலகம்...
மகளி்ர் விடுதி...!!!

நினைவுகள்...


கைவிரலில் தொட்டு 
கண்மையாக இட்டுக்கொள்ளும் 
கருமையான இருளிலும் 
உனது நினைவுகள் 
ஒளிகற்றைகளாக 
மின்னுகின்றன..!!!

Wednesday, June 27, 2012

மாற்றம் ...


காத்திருத்தலும் சுகம் என்றது
சென்ற தலைமுறை ...
சிறு மாற்றம் தான்
அதையே வெறுப்பாக
 உமிழ வைக்கிறது ...

இத்தலைமுறையின் 
மிக சிறந்த மோசமான 
கண்டுபிடிப்பு ....
கைபேசியே தான் ..!!!

இசை...


பின்னணி இசை இல்லாமல் ...
ஓடும் நம் நிழல் படத்திற்கு 
இசை கோர்கிறது புகைவண்டி ...
தடக்தடக் தடக்தடக் ....!!!

Friday, June 15, 2012

இரைச்சல் ...


நடு நிசியில் ...
என் செவிக்குள் 
அதிரும் பாடலையும் 
மீறி ....

எங்கோ செல்லும் 
வாகனத்தின் இரைச்சல் ...

சங்கீதத்தோடு ....
உன்  நினைவுகளையும் 
எழுப்புகிறது ....!!!நினைவுகளில்...


மொட்டை மாடியில் ...
தூக்கம் தொலைத்து 
விண்மீன்கள் எண்ணி 
கொண்டிருக்கையில் ...
எண்ணிக்கை மறந்து 
உன் நினைவுகளில் 
மூழ்கி விடுகிறேன் ...!!!


Monday, June 11, 2012

இன்று...


நான் நினைத்ததை போல்
இன்று எதுவுமே நடக்கவி்ல்லை
அதற்காகவே ஆனந்த கூத்தாடுகிறது
மனம்...
நினைத்ததை போலவே
நடந்திருந்தால் ...
மனம் திருப்தியில்
அமைதியாய் மூழ்கியிருக்கும்
உறக்கத்தி்ல்...!!!

நினைவலையில் ...


வாழ்க்கை சக்கரம் 
வேகமாக சுழலும் ...
எனக்கே தெரியாமல் 

பலமைல் தூரம் 
போய் விட்டாலும் ...
என்றைக்காவது ...

என் மகன் ...
தன் தோழியிடம் ...
கதைத்து கொண்டிருக்கையில் 

உன் அம்மா 
என் நினைவலையில் ...
மோதி செல்வாள் ...!!!

தலைவன்...தித்தித்து திணறவைக்கும் ...
தேன் கிண்ணத்து 
துளி அல்ல நீ ...!!!

என்றுமே திகட்டாத ...
தண்ணீர் தேசத்து 
தலைவன் நீ ...!!!

எங்கோ...


வெவ்வேறு திசைகளில் 
சென்ற பின் ...

உனக்கு துணைவியே 
சிறந்த தோழியாகவும் ...

எனக்கு மணவாளனே 
உற்ற தோழனாகவும் ...

உரு பெற்ற பின் ...

எங்கோ கண்சிமிட்டும் 
நட்சத்திரமாய் ...

மாறி விடுமோ 
நம் நட்பு ...!!!

நினைவுகளின் 
இடுக்கில் ..!!!

மன்னிப்பு ...


அன்று ...
என்னுடைய ஒரு நொடி 
மௌனம் ...
உன்னை காய படுத்திய 
ரணத்திற்கு ...
இன்று சிந்தும் கண்ணீர் 
துளியால் ...
மன்னிப்பு  கோருகிறேன் ..!!!

உனக்காகவே...


உன் மேல் நான் எவ்வளவு ..
கோபமாய் இருந்தாலும் ...
என் கவிதைகளுக்கு மட்டும் 
உன் மேல் கோபமே 
வருவதில்லை ..!!!
உனக்காகவே சுவாசித்து 
கொண்டே 
இருக்கிறது ..!!!

சிரிக்காதே ...


சத்தமாய் காற்று 
விசும்பும் போது ...
ஒரு தென்னை 
மற்றொரு தென்னை
மீது மோதும் பொழுது 
சத்தமாய் சிரிக்காதே 
என்று குட்டுவதாய் 
தோன்றுகிறது ..!!!

காலம் ...


பூமியாய் நான் ...
தூறலாய் நீ ...
வெயிலாய் காலம் ...
நீ வந்து 
சென்றதற்கான ...
சுவடை அழிப்பதற்கு 
தயாராய் ...!!!

Sunday, June 03, 2012

பொக்கிஷம் ...


பரணில் பழைய 
டைரி ...
எனக்கு மட்டுமான 
நிலவறை ..
பொக்கிஷம் ...!!!

Saturday, June 02, 2012

குறுந்தகவல் ...


 நாள் முழுதும் 
அருகருகே இருந்தும் ...
முகங்களை பாராமல் ...
வேலை பளுவில் மூழ்கி 
வெளி வருகையில் ..
இருவர் முகம் பார்த்து 
சின்னதாய் சிரித்து 
கொள்வதை போல் ...

வெகு தூரம் இருப்பதால் 
அந்நாளின் முடிவில் 
நீ அனுப்பும் ...
ஒரே ஒரு ...
குறுந்தகவல் ...!!!

Friday, June 01, 2012

பரிசு...


உன் பரிசுகளை 
எல்லாம் ...

என் தலையணை 
களவாடிவிட்டது ...

நீ அருகில் 
இல்லாததால் ...
Related Posts Plugin for WordPress, Blogger...

உங்கள தானுங்க ...


இங்கே வந்து சென்றதற்கான கால்தடத்தை(COMMENTS) விட்டு செல்லுங்கள் ...

அதுவே என் கவிதைகளுக்கான கெளரவம் ...!!!