Sunday, July 29, 2012

எனக்கு ...


எனக்கு ...

அப்பா புடிக்குமா ???
அண்ணன் புடிக்குமா ???

அப்பா ...
முந்தய தலைமுறையை 
சார்ந்த அண்ணன் ...!

அண்ணன் ...
சக தலைமுறையை 
சார்ந்த அப்பா ...!

துலாபாரம் தோற்க்கும் 
பிடித்தலை அளவிட்டால் ...!!!

Saturday, July 28, 2012

மையல் ...நடுநிசி வரை ...
பேச்சில் காதல் வளர்க்கும் 
காதலர்களை ...
பார்த்தால் பரிதாபமாக 
தோன்றுகிறது ...!
நான் தலையனையோடு 
மையல் கொண்டிருக்கையில் ...!!!

Thursday, July 26, 2012

கல்லூரித்தாயே ...


This POETRY  is DEDICATED to FIRST BATCH(2009) of ANNA UNIVERSITY, TUTICORIN CAMPUS...!!உலகில் ஒவ்வொரு சிசு 
பிறக்கும் பொழுது ...
அதன் தாய் புதுஜென்மம் 
எடுப்பாளாம் ...!

இங்கே தாயும்சேயும் சேர்ந்தே 
ஜென்மம் எடுத்தோம் ...
ஆம் எங்கள் கல்லூரித்தாயும் 
எங்களோடே பிறந்ததால் ...!

ஓரிடத்தில் முதலில் கூடுபவர்களே 
நண்பர்கள் ஆவார்களாம் ...
இங்கே அனைவருமே ஒன்றாகவே 
காலடி வைத்தோம் ...!

அதனால் தான் இன்றுமே 
தலைமுறை இடைவெளியின்றி ...
உற்ற நண்பர்களாகவே இருக்கிறோம் 
நாங்களும் ஆசிரியர்களும் ...!


உயிர் பெற்று சிதறிய 
பூக்களாய் கிடந்தோம் ...
மாலையாய் புதுவடிவம் பெற்றோம் 
இங்கே இவளால் ...!

உருவமற்ற உன்னோடு தொடங்கிய 
புதிய பயணம் ...
உயிர்பெறும் இந்நாட்கள் என்றுமே 
தொடராது நிஜத்தில் ...!

பதின்பருவத்தில் உன்னுள் பதியமிடபட்டு 
பருவத்தே அறுவடையானாலும் ...
நாட்காட்டியில் தாள்கள் கிழிக்கப்பட்டு 
வருடங்கள் ஓடினாலும் ...!

என்றுமே எங்களின் நினைவலைகளில் 
நூற்றாண்டுகள் கடந்தாலும் ...
உயிரோவியமான இந்நாட்களின்  சாட்சியாக 
நீயே இருப்பாய் ...!


Wednesday, July 25, 2012

புரவி...


பந்தயம் கட்டி 
பந்தாட படும் 
சுதந்திரமாய் 
சுற்றிவரும் ...
லாடம் கட்டிய 
புரவியாய் ...
மாறிப்போன 
சிறுபிள்ளை 
நான் ...!!!

நமக்கு நாமே ...


நமக்குள் இருக்கும் 
ரகசியங்களால் ...
நமக்கு நாமே 
அந்நியோன்யமாய் 
தோன்றுகிறது ...!!!

நமக்குள் இருக்கும் 
உரிமை கோரல்களால் 
நமக்கு நாமே 
அன்னியபடுவதாய் 
தோன்றுகிறது ...!!!

Saturday, July 21, 2012

கணங்களை ...


அனைவரும் இருந்தும் 
கணங்களை ...
ரணமாய் கொள்ளும் ...
நீ இல்லாத வெறுமையை 
உணர தயாராய் இல்லை ...
நான் ...!!!

நட்பு ...
காற்றில்...கனமான கணங்களையும் 
காற்றில் கரைய வைத்து 
விடுகிறாய் ...
பார்வையிலே ...!!!

Wednesday, July 18, 2012

கவிதை ...

Sunday, July 15, 2012

பயணம் ...


எப்படி துடிக்கும்...


மூச்சு இல்லாமல் இதயம் 
எப்படி துடிக்கும்...???

மௌனமே மூச்சுகாற்றாய் 
உருவம் வாங்க ...

இதயதுடிப்பே மொழியாக 
மருவுகிறது ...

இங்கு நீ மௌனமாகி 
நான் மொழியாகிறேன் ...!!!

நீ இல்லாமல் நான் இல்லை ..!!!  


தொல்லை...


கவிதையில் வடிவதற்காவது 
காதலித்து தொலை என்று ...
இம்சிக்கும் ஹார்மோன்களின் 
தொல்லை தாங்க முடியவில்லை ...!!!


சிம்மாசனம் ...


நாள் முழுதும் 
தூதுகள் ....
அனுப்பாவிட்டாலும் 

என் சிந்தனை 
சிம்மாசனத்தில் 
நீ தான் ...
வீற்றிருக்கிறாய் ...!!!

நீரூற்றி ...


அனாதையாய் கிடந்த 
கள்ளி செடிக்கு ...
நீரூற்றி ..!!!

ரோஜா செடியாக மாற்றி 
முட்களுக்கும் கர்வமாய் 
அமர கற்று ....
கொடுத்துவிட்டாய் ...!!!

புலப்பட்டால் ...


என் கவிதைகளில் 
" நீ " எல்லாம் ...

நீ என புலப்பட்டால் ????

எல்லோருமே உன்னை 
உரிமை கொண்டாட 
ஆரம்பித்து விடுவார்களோ !!!

முதல் காதல் ...


கரையில் கால் நினைக்க 
மணலில் நிற்கையில் ...

முதல் அலை ஆசையாய் 
காலை வருட வர ...

காலை வாருவதாய் எண்ணி  
பின்னோக்கி ஓடுவதை போல ...

முதல் காதல் ...!!!

ஹ்ம்ம் ...


இறந்து போன 
தருணங்களுக்கு ...
ஆறுதலில் 
ஆசுவாச படுத்துகிறாய் ...!!!

சாம்பலாகி போன 
இதயத்திற்கு ...
சம்பாஷணைகளில் 
உயிர் கொடுக்கிறாய் ...!!!


Friday, July 13, 2012

கரைகிறேன் ...


ஏதேதோ ...


Wednesday, July 11, 2012

அமைதி ...மெய்பொருள் ...


ஆசை ...Sunday, July 08, 2012

கடைசி வருடம் ...நானே ...

Saturday, July 07, 2012

ஆசையாய்...


காதலிக்க ஆரம்பித்து விட்டேனோ ...???
அம்மா சந்தேகபடுகின்றாள் ...!!!

வெகு நாட்களாக பெட்டியில் தூங்கிய 
கொலுசை ...
ஆசை ஆசையாய் காலில் மாட்டியவுடன் ...!!!

கடினம் ...


காதலனை கைக்குள் 
பிடிப்பது கூட எளிது ..

காற்றில் பறக்கும் 
முழுபாவடையை ...
பிடிப்பது தான் கடினம் ..!!!

அனுபவம் பேசுது போங்க ...!!!

காலம்...உணர்கிறேன் ...பிறகும் ...


இன்று நம் நட்பை 
பற்றி எண்ணுகையில் 
சந்தோசத்தில் அழும் மனம் 
இருபது முப்பது வருடங்களுக்கு 
பிறகும் ...
அழுக தான் செய்யும் 
பயணங்கள் தொடர்ந்தாலும் 
பாதியில் பிரிந்தாலும் ...!!!

Friday, July 06, 2012

சும்மா ..

என் கவிதைகளுக்கு 
உயிராகி போன உன்னிடம் 
மூச்சு காற்றை கடன் கேட்டு 
கோமாளி ஆகிவிட்டேன் ...!!!


கவனமாய் இரு ...
நீ என்னை திருடியதற்கு 
தண்டனையாக ...
உன் கைக்குட்டை திருட 
திட்டம் தீட்டியிருக்கிறேன் ....!!!


உன் மௌனங்களே 
என் கவியாவதாய் 
நீ சொல்லி தான் 
எனக்கு தெரிந்தது ...!!!


வாழ்க்கைசக்கரம் ...


பில்ட்டர் காபி போடுவதில் 
ஆரம்பிக்கும் உன் நாட்கள் ...

மெல்ல நகரும் உணவு 
தயாரிப்பில் ....

அனைவரையும் அலுவலகம் 
அனுப்புவாய் ...

நீ மட்டும் தனியே வீட்டில் 
சக்கரமாய் சுழல்வாய் ...

பின்னிரவில் தான் முடியும் 
அந்த நாள் உனக்கு ...

ஆனாலும் சலிப்பு தட்டுவதில்லை 
உனக்கு ...

முக்கால்வாசி இல்லத்தரசிகளின் 
வாழ்க்கைசக்கரம் ...!!!

நீ ...கவிதையாய் ...

♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥ 
♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥

நான் ...


நான் சுவாரஸ்யமாய் 
கதைத்து கொண்டிருக்கையில் ...
கொட்டாவியில் நிறுத்து 
என சம்பாஷித்தும் ...
பொருட்படுத்தாமல் 
கதைத்து கொண்டே இருக்கும் 
அறிவான முட்டாளடா நான் ...!!!

கோபத்தில்...


நீ நீயாய் இருக்க 
நான் பனியாய் உருக ...
கோபத்தில் உன் கழுத்தில் 
கத்தி வைத்து ...
நான் இறந்து போக 
முயற்சிக்கிறேன் ...!!!

தெரியாமலே ...


சந்தோசமாய் கழியும் 
பகல் அரிதாகி ...
அழுகாமல் தூங்கும் 
இரவுகள் அபூர்வமாகி ...
நொடிகள் நிமிடங்களாகி 
நிமிடங்கள் மணிகளாகி 
மணிகள் நாட்களாகி 
சென்றுகொண்டே இருக்கிறது 
விடை தெரியாமலே ...!!!

எனக்கு ...

பாசி படர்ந்த தரையில் 
நடக்க பழகிவிட்ட 
எனக்கு ...
வெறும் தரையில் 
நிற்க கூட 
மறந்து விட்டது ...!!!

Thursday, July 05, 2012

மட்டும் ...


கண் மூடி திறப்பதற்க்குள் 
ஒரு வனத்திற்கு ....
சென்று விட கூடாதா ???

ஆள் அரவம் அற்று ...
நானும்  நீயும் அல்ல 
நானும் நான் மட்டுமே ...

ஸ்னோ வைட் போல 
நீண்ட தூக்கம் ...
இளவரசன் வேண்டாம் !!!
நானே எழுந்து கொள்வேன் ...

பார்பி போல 
அழகாய் அலங்காரம் ...
சின்தெர்லா போல  
நடனம் 12 மணிக்கு மேலும் ...

இளவரசியாய் சுற்றி வர ...
சுதந்திரம் மட்டுமே சுவாசமாய் 
நிலா மட்டும் கூட வர அனுமதி ...

இவை ஏதும் நடந்திரா விட்டாலும் 
நானும் நிலவும் மட்டும் 
எஞ்சியிருக்கிறோம் ....
மொட்டைமாடியில் ...!!!

Wednesday, July 04, 2012

மிச்சமாய் ...

எனக்குள் நானே புதைந்து 
கொண்டிருக்கும் ...
இந்த இரவின் மிச்சமாய் 
இருக்க போவது ...
நான் மட்டுமே ...!!!

Monday, July 02, 2012

காதலன்...


எனக்கொரு காதலன் 
இருந்திருந்தால் ...
நிச்சயமாக பொறாமை 
பட்டிருப்பான் ...
நான் அவனாக இல்லையே
என்று ...
நம் நட்பை பார்த்து ...!!!

ஒன்று ...


மழை நீரில் நினைகிறேன் 
என்று அறியாத மேகமும் ...
கண்ணீரில் நினைகிறேன் 
என்று அறியாத நீயும் 
ஒன்று தான் ...!!!

முயலுகிறேன் ...

தூங்கி வழியும் 
பின்னிரவில் ....
கதவு தட்டபட 
பாதி விழித்து 
நீ என அறிந்து 
கதவு திறந்து 
திரும்புகையில் ...
புது ஹேர்ஸ்டைல் 
அழகு என்று ...
கிண்டலடித்து கோபமூட்டி 
இரு  கைகளுக்குள் சிறையிட்டு 
காதலனாக போகும்... 
கணவனுக்காக ...
இரவுகளை சேமிக்க
முயலுகிறேன் ...

ஓடமாய் ...


ஆற்றின் நீரோட்டத்தின் 
இழுப்பிற்கு செல்லும் 
துடுப்பை இழந்த 
ஓடமாய் ...
அலைகிறது மனம் 
புரியாமலே ...!!!
Related Posts Plugin for WordPress, Blogger...

உங்கள தானுங்க ...


இங்கே வந்து சென்றதற்கான கால்தடத்தை(COMMENTS) விட்டு செல்லுங்கள் ...

அதுவே என் கவிதைகளுக்கான கெளரவம் ...!!!