Tuesday, August 28, 2012

உயிர் ...


உன் உயிரின் வாசத்தில் 
மணக்கும் கவிகள் ...
உன் வாசிப்பில் உயிர் 
பெறத்துடிக்கிறது ...!!!

Thursday, August 23, 2012

நிதர்சனம் ...


கண்கள் சந்தித்து கொள்ளும் 
தருணங்கள் பாஷையாக 
வெறுப்பு பரிமாறப்படலாம் ...

வார்த்தைகள் வரும் முன் 
தயக்கம் முந்திக்கொண்டு 
முகம் பார்க்காமல் சென்றிடலாம் ...

எங்கிருந்தாலும் எங்கோ
ஓரமாய் வலி தரும் 
சோகங்களாக மாறிடலாம் ...

நினைவுகளின் மடுவில் 
அமர்ந்து அழுகதூண்டும் 
ரணங்களாகி விடலாம் ...

என்றைகாவது ஒருநாள் 
தவறியேனும் நினைத்திட கூடாது 
என தீர்க்கமாகலாம் ...

எங்குமே வரையறைகள் 
தகர்ந்திடும் பொழுது ...!!!



Wednesday, August 22, 2012

புனிதமானது ...


காதல் வென்று ...
காமம் கொன்று ...
எஞ்சி நிற்கும் 
ஆண் - பெண் நட்பு ...
புனிதமானது ...!!!!



Tuesday, August 21, 2012

சிலர் ...



Monday, August 20, 2012

ஹைக்கூ காதல்கள் - 2


காதல் மழையால் 
மண்வாசனையாய் ...
மாறி போன நீ ...!!!


தோகை விரித்தாடும் 
மயிலாய் மனம் ...
உன் வருகையால் ...!!!


கன்னத்தில் முத்தம் கேட்டால் 
காது மடல் முத்தம் ...
பரிசளிக்கும் கள்வன் நீ ...!!!


என் கை சிறையில் 
இருக்கும் அலைபேசியின் ...
மறுமுனை செல்லகைதி நீ ...!!!


ஒற்றை புன்னகை ...
காவியமாகும் 
காதலில்...!!!

Sunday, August 19, 2012

ஹைக்கூ காதல்கள் - 1



ஹைக்கூவாய் உள்புகுந்து 
காவியமாய் மாறிப்போனது 
காதல் ...!!!




சின்ன சின்னதாய் காதல் செய்து ...
கொஞ்சம் கொஞ்சமாய் உன்னை ...
கொல்ல ஆசை ...!!!





கவிதையின் கரு பொருள் அல்ல 
உணர்ச்சியின் எரி பொருள் ...
இந்த காதல் ...!!!

Saturday, August 18, 2012

அச்சச்சோ ...


இல்லாத மீசையை முறுக்கும் 
பதின்பருவத்து வாலிபனையும் ...

இருக்கும் மீசையை மலித்துகொள்ளும் 
ஆடவனையும் ...

பார்த்தால் என்ன தோன்றும் ...???

சிரிப்பு தான் வரும் ...!!!


Friday, August 17, 2012

அன்பு தொல்லை ...


என்னிடம் பொய் புனையாமல் ...
ஆனாலும் மெய் முக்கியமில்லை ...
என்றதற்கு ...

சந்தோசம் கொள்ளவா ..???
என்னை கொல்லவா ..???

மெய்யாகினும் பொய்யாகினும் 
கண்மூடி தனமாக ...
உன்னை சுற்றும் 
அன்பு தொல்லை நான் ..!!!

கேள்வி ...



Thursday, August 16, 2012

பயணத்தில் ...


கண்களிலே பருகப்படும் 
ஐஸ்கிரீமாய் மாறி போன மேகம் ...

ஜன்னலுக்கு வெளியே கைகள் 
மட்டுமே அனுபவிக்கும் மழை ...

ஆடைக்குள் பதுங்காமல் முகம் 
அதிர்ஷ்டமாய் உணரும் குளிர்காற்று ...

அரைகுறையாக அனுபவிக்கப்படும் 
காதல்கள் இவை ...!!!

Wednesday, August 15, 2012

தூக்கம்...


உன் தோள் சாய்ந்து
தூங்கும் எனக்கு ...

பாடும் தாலாட்டை
மேடையில் அரங்கேற்றட்டுமா ...

 என்ற கேள்வி ...!!!
என் தூக்கம் களவாடிவிட்டது ..!!!

Tuesday, August 14, 2012

அன்பு ...




Related Posts Plugin for WordPress, Blogger...

உங்கள தானுங்க ...


இங்கே வந்து சென்றதற்கான கால்தடத்தை(COMMENTS) விட்டு செல்லுங்கள் ...

அதுவே என் கவிதைகளுக்கான கெளரவம் ...!!!