Saturday, September 29, 2012

அன்பை பொழிய ...


கோபத்தில் அருவியாய் 
விலகினாலும் ...

மறுநொடியே ஆறாய் 
அன்பை பொழிய ...

விலகிய வேகத்திலே 
வந்து விடுகிறாய் ...!!!

Tuesday, September 18, 2012

நீ ...


காரணமே இல்லாமல் 
சிரிக்க ....
காரணம் நீ ....!!!

என் கண்ணீர் துளிக்குள் 
விழுந்த ....
சமுத்திரம் நீ ...!!!

Sunday, September 16, 2012

உன்னையும்...


எங்கேயும் ஓடிவிடாமல் 
சிறு பூனையை ...

பெட்டிக்குள் பூட்டி 
வைத்திருப்பதை போல ...

பத்திரமாக வைத்திருக்கிறேன் 
நம் நினைவுகளை ...!!!

உன்னையும் சேர்த்து தான் ...!!!

Wednesday, September 05, 2012

தருணங்கள் ...

 சில உறவுகளில் ...
நம்மை நாமே 
தொலைத்து  போன 
தருணங்கள் ...

காதுக்குள் ஒலிக்கும் 
இசையாய் ...
நமக்கு மட்டும் 
நெய்ய பட்ட பாடலாய் ...!!!

Monday, September 03, 2012

புரியாமல் ...

 
ஹெட் போன்ஸ் முடிச்சுகளை 
போல் ...
எப்படி உருவானது என்றே 
புரியாமல் ...
பயணித்து கொண்டிருக்கிறது 
நம் நட்பு ...!!!

Saturday, September 01, 2012

எப்படியோ ...


எதேச்சையாக செய்த ...
சின்ன சின்ன சம்பாஷனைகள் 
எப்படியோ ஒட்டிகொண்டது ...
பெரிய பெரிய நினைவுகளாக ...!!!

ஹைக்கூ காதல்கள் - 3

வலிக்காத கால் விரல் 
சுடக்குகள் ...
உன் கைகளாலா ...
இல்லை காதலாலா ..???
தொலைந்து போக துடிக்கிறேன் 
உன் இதய துடிப்பாக ...
மட்டுமே ...!!!
என் கை விரல்களுக்கு 
கண்ணாம்பூச்சி விளையாட 
கற்று கொடுத்த கிறுக்கன் நீ ...!!!

என் இதழ்களுக்கு 
மௌன பாஷை புகட்டிய 
குரு ----> காதல் ...!!!!


ஒரு குடைக்குள் இருவர் ...
பாதி நனைந்து ...
முழுதாய் நனைந்தோம் 
காதலில் ...!!!

Related Posts Plugin for WordPress, Blogger...

உங்கள தானுங்க ...


இங்கே வந்து சென்றதற்கான கால்தடத்தை(COMMENTS) விட்டு செல்லுங்கள் ...

அதுவே என் கவிதைகளுக்கான கெளரவம் ...!!!