Sunday, October 14, 2012

ஹைக்கூ காதல்கள் - 4


வெகு அருகில் இல்லை ...
நீ சுவாசிக்கும் சப்தம் 
கேட்கும் தொலைவில் ...
அமர்ந்தால் போதும் ...!!!


வெகு நேரம் இல்லை ...
 கண் சிமிட்டல் 
இடைவெளி விடுத்து ...
பார்த்தால் போதும் ...!!!


மணி துளிகள் கரைய 
அமைதியாய் அமர்ந்திருக்க ...
சட்டென என் முடிகோதும் 
உன் கைகளுக்காகவே ...
மௌனத்தில் தொலைகிறேன் ...!!!

Saturday, October 13, 2012

மொழி ...


நினைவுகளை வெளி கொணர்ந்தால் ....
என்ன மொழி பேசும் ...???

மொழி அறிந்தால் ...

சோக கீதமாய் சினுங்குமா ...?
சந்தோஷ ராகமாய் பறக்குமா ...?


Thursday, October 11, 2012

நான் ... நீ ...


விடாமல் பேசும் நான் ...
விட்டு விட்டு உம் கொட்டும் நீ ...

எல்லாவற்றையும் சொல்லும் நான் ...
எதையும் மறக்கும் நீ ...

உன்னை நச்சரிக்கும் நான் ...
என்னை மட்டும் பொறுத்துக்கொள்ளும் நீ ...

எல்லாவற்றிற்க்கும் அழும் நான் ...
எனக்கு மட்டும் அழும் நீ ...

எதற்கும் அதிகமாய் யோசிக்கும் நான் ...
தேவைக்கு மட்டும் யோசிக்கும் நீ ...

என்னை முழுதாய் புரிந்து கொண்ட நீ ...
உன்னை புரிந்தும் புரிந்து கொள்ளாத நான் ...

இதில் மட்டும் உனக்கு பின் நான் ....!!!!

Sunday, October 07, 2012

நிலவோடு ...


ஜன்னல் வழி
எட்டி பார்க்கும் ...
நிலவோடு ...

சற்றே நிதானமாய் 
ஓடி பிடித்து ...
விளையாடுகிறது ...

உன் நினைவுகள் ...!!!

Friday, October 05, 2012

சர்வாதிகாரி ...


கீறலாய் தோன்றி 
மின்னலாய் மாறி போன நீ ...

இதயத்தின் ஆழங்களில் 
புதைத்து பார்த்தும் 
வெளிவர தயாராய் ...

பிறை நிலவு முழு நிலவாக 
துடிப்பதை போல் ...

நுழைவு சீட்டின்றி உள்புகுந்து 
போர் தொடுக்காமல் ...
சிம்மாசனம் ஏறிய 
சர்வாதிகாரி ...!!!

Wednesday, October 03, 2012

நினைவுகள் ...



எங்கு சென்றாலும் 
பின் தொடராமல் ...

திடிரென்று குதிக்கும் 
திருட்டு பூனையாய் ...

வந்து விடுகிறது 
உன் நினைவுகள் ...!!!

Monday, October 01, 2012

வரம் ...



புல்வெளியின் அனுமதி 
பெறாமலே அழகு சேர்க்கும் ...
பனியாய் ...

வினா எழும் முன் 
விடையாய் முந்திக்கொண்டு 
வந்தவன் ...

நான் கேட்காமலே 
தரப்பட்ட வரம் ...
நீ ...!!!
Related Posts Plugin for WordPress, Blogger...

உங்கள தானுங்க ...


இங்கே வந்து சென்றதற்கான கால்தடத்தை(COMMENTS) விட்டு செல்லுங்கள் ...

அதுவே என் கவிதைகளுக்கான கெளரவம் ...!!!