Thursday, December 12, 2013

ஹைக்கூ காதல்கள் - 14

சத்தமின்றி நகரும் நடுநிசியில் 
உன் கை கோர்த்து நடை ...
ஆள் அரவமற்ற தேநீர் கடை
நமக்காகவே தயாரிக்கப்பட்ட தேநீர் ...

என் கோப்பையில் ..
தன் மூச்சுக்காற்றால் சூடாற்றி ...
என் மூச்சுகாற்றை சூடேற்றும் 
கள்வனின் தோள் சாய்ந்து ...

விண்மீன் எண்ணிகொண்டே 
துயில் உரிக்கும் இரவை ...
நம் கைகளுக்கிடையே ...
ஒழித்து கொள்ள வேண்டும் ...!!!


Sunday, December 01, 2013

நான் ...


நீ பாதரசம் பூசிய 
கண்ணாடியல்ல 
நான் ...

என்றுமே மாறாமலிருக்கும் 
நீ செதுக்கிய கற்சிலை 
நான் ...!!!


Friday, November 29, 2013

ஹைக்கூ காதல்கள் - 13நான் எதேச்சையாய் 
முணுமுணுக்கும் 
பாடலோசையை ...

மோப்பம் பிடித்துக்கொண்டு 
சத்தமே இல்லாமல் அருகில் 
வந்து ரசிக்கும் உன்னை ...

பார்வையிலேகொன்று விடலாம் 
என தோன்றும் ...!!!
நாம் இருவரும் நடக்கையில் 
கொக்கி போல் ...
சிக்கி கொள்ளும் 
சுண்டு விரலுக்கும் ...
சிரிப்பு வருகிறது 
நமது மௌனத்தின் ..
நிசப்தத்தால் ...!!!

Wednesday, November 27, 2013

நீயே ...


எவ்வளவு தொலைவில் 
இருந்தாலும் ...
எனது எண்ணங்களின் 
தொடக்கமும் முடிவும் ...
நீயே ...!!!

Monday, November 25, 2013

மனம் ...


மழை துளிகளில் 
நெனைந்து சிலிர்த்த 
இலையை போல் ...

உனது நினைவில் 
நெனைந்து சிலிர்த்திருக்கிறது 
எனது மனம் ...!!!

Saturday, November 23, 2013

தவறுகளை ...


சற்றே கோணலாய் 
தலை சாய்த்து 
சிரித்தே ...

மன்னிக்க வைத்து 
விடுகிறாய் ...

கோணலான தவறுகளை ...!!!

Thursday, November 21, 2013

வேள்வி ...


சிறு புன்னகையோடு 
துப்பாக்கி வைத்து ...
குண்டுகளை அடுத்தடுத்து 
துளைத்திட வேண்டும் ...

சதை பிண்டமென 
ஊடுருவும்  
கண்ணிரண்டின் மத்தியில் ...!!!

Tuesday, November 19, 2013

ஏனோ ...


பெய்யான பெய்யும் 
மாமழை போல ...
கோபம் கொண்டாலும் ...

சட்டென மாறும் 
வானிலை போல ...
அன்பு சாரலடிக்க ...
துவங்கி விடுவது 
ஏனோ ...???

Sunday, November 17, 2013

உலகம் ...


சத்தமிட கூடாது 
அப்பாவின் உலகில் ...

கலைத்திட கூடாது
 அம்மாவின் உலகில் ...

குறும்புத்தனம் கூடாது 
ஆசிரியரின் உலகில் ...

எடுத்திட கூடாது 
அக்காவின் உலகில் ...

இதிலெல்லாம் தொலைந்து விடுகிறது 
எனது (குழந்தைகளின்) உலகம் ...!!!

Friday, November 15, 2013

வாசனை ...


சேகரித்து வைத்திருக்கும் 
புத்தகங்களின் வாசனை போல் ...

உந்தன் நினைவுகளின் 
வாசமும் மங்காமல் 
மண்டிக்கிடக்கிறது மனதில் ...!!!


Thursday, November 14, 2013

குழந்தைகள் தினம் ...


குழந்தைகள் தினத்தன்றும் ...

எத்தனை குழந்தைகள் 
மற்றுமொரு ...

கூலிக்கான தினமென 
கண் விழிக்கின்றன ...

பாரதமே என்று நீ 
விழிப்பாய் ...!!!இறகாய் பறந்திடும் 
குழந்தைகளின் மத்தியில் ...

காற்றடைத்த பலூன்களை 
விற்கும் சிறுவன் ....

நீரில் விழுந்த பஞ்சாய் 
மனதை கனக்க 
வைத்து விடுகின்றன ...!!!

Monday, November 11, 2013

மழை மழை ...


சட்டென வந்து போகும் 
கோடை மழையாய் ...
வந்து போகிறது 
உந்தன் நினைவு ...!!!


ஒவ்வொரு முறை 
மழை பெய்கையிலும் ...
பூமி மோட்சம் 
பெறுவதாய் தோன்றுகிறது ...!!!

Saturday, November 09, 2013

தோன்றும் ...


உனக்கான நானும் 
எனக்கான நீயும் ...

வெகு தொலைவில் 
தொலைந்த பிறகு ...

என்றோ ஒரு நாள் 
திரும்பி பார்க்கையில் ...

என்னவென்று தோன்றும் ...???

கேள்விகள் ...


சின்ன சின்ன 
கேள்விகள் ...

விடை அறியா 
கேள்விகள் ...

அறிந்தும் அறிய முற்படாத 
கேள்விகள் ...

தெரிந்து கொள்ள விரும்பாத 
கேள்விகள் ...

எத்தனையோ இருந்தும் ...

கண்ணீர் துளிகளை 
விடையாக கேட்கும் 
கேள்விகள் ...

ஆச்சர்யமானது ...!!!

Friday, November 08, 2013

என்னவோ ...காதல் கடிதங்களின் 
வாசம் என்னவோ ...?

காதல் கவிதைகளின் 
சுவை என்னவோ ...?

காதல் பாடல்களின் 
நிறம் என்னவோ ...?

காதல் பார்வையின் 
ராகம் என்னவோ ...?

காதல் கதைகளின் 
ரகசியம் என்னவோ ...?

காதலின் காதல் 
காதல் என்னவோ ...???

Monday, November 04, 2013

புன்னகை ...


சத்தமின்றி பூமியை 
முத்தமிடும் மழை துளிகளாய் ...

சட்டென்று ...
தொற்றி கொள்கிறது ...

உனது புன்னகை 
எனக்கும் ...!!!

வினவினாள்...


                                         குறிக்கோளின்றி ...
                                   இல்லாத யாருக்காகவோ 
                                  எழுதப்படும் கவிதைகளை ...

                                                  எவரோ...
                                              யாருக்காக ...
                                    என்று வினவினாள்...

                                       அசடு வழியாமல் 
                                   வேறென் செய்வேன் ...!!!


Sunday, November 03, 2013

சுவடுகளாய் ...


சிறுவயதில் மறுக்கப்பட்ட 
மிட்டாய்களும் ...

தற்சமயம் மறுக்கப்படும் 
மன்னிப்புகளும் ...

ரணங்களின் சுவடுகளாய் 
எங்கோ ஒரு மூலையில் ...

முகாரி வாசித்து கொண்டு 
தான் இருக்கின்றன ...!!!


Thursday, October 24, 2013

நானே...


எதிர்பார்ப்புகளும் ...
ஏமாற்றங்களும் ...
பழகிவிட்ட எனக்கு 
புதுப்புது ...
எதிர்பார்ப்புகளும் ...
ஏமாற்றங்களும் ...
திக்குமுக்காட செய்கின்றன ...!!!


எத்தனை ஆண்டுகள் 
ஆனாலும் ...
எனக்கு நானே 
ஆச்சர்யக்குறி ...!!!

ஹைக்கூ காதல்கள் - 12


நான் செய்யும் 
சின்ன சின்ன 
தவறுகளுக்கு ...

நீ செல்லமாய் 
காது மடல் திருகுவது 
தண்டனையல்ல ...

பரிசு ... !!!


நான் அரை தூக்கத்தில் 
உளறுவதை ...

சங்கீத சங்கமம் 
என வஞ்சித்து 
புகழ்வதே ...

உனது கிறுக்குத்தனம் ... !!!


எனது கம்மல் ஜிமிக்கியின் 
அசைவிற்கு ஏற்ப 

உனது மூச்சு காற்று ...
மேல் எழுந்து கீழ் செல்வதற்காகவே 

தலை அசைத்து கொண்டே 
இருக்கலாம் ...!!!

நிழல் ...


கடலான நினைவு 
தேனில் ஊறும் ...
இதயத்தை ...

சின்ன சின்ன எறும்புகளாய் ...
அரித்து கொண்டிருக்கிறது ...

நிஜங்களின் நிழல் ...!!!

Saturday, October 19, 2013

வாசித்ததை ...


நிதானமாய் வாசித்து 
கொண்டிருக்கையில் ...

சட்டென வந்து போகும் 
உந்தன் நினைவுகள் ...

புன்னகைத்து மரிக்க 
செய்கின்றன வாசித்ததை ...!!!

Thursday, October 03, 2013

தற்கொலை ...


விழுந்து அடித்து கொண்டு 
வெளிவரும் கண்ணீருக்கு 
தெரியாது ...
அவை உனக்காகவே 
மரணிக்க ..
கன்னங்களில் தற்கொலை 
செய்கின்றன என்று ..!!!
Related Posts Plugin for WordPress, Blogger...

உங்கள தானுங்க ...


இங்கே வந்து சென்றதற்கான கால்தடத்தை(COMMENTS) விட்டு செல்லுங்கள் ...

அதுவே என் கவிதைகளுக்கான கெளரவம் ...!!!