Wednesday, January 30, 2013

முக்தி...



என் நண்பனின் ...
"அருமையான காதலி நீ"

என்ற பாராட்டலில் 
முக்தி  பெறுகிறது...

இல்லாத காதலனுக்காக 
வார்க்கப்படும் என் கவிகள் ...!!!


Monday, January 28, 2013

ஹைக்கூ காதல்கள் - 7


வெட்க படு என்றாய் ...
கட்டை விரலில் கோலம் போட்டு ...
தலை குனிந்தேன் ....

வெட்கம்னா இதுவா என்று 
கிண்டல் செய்து ...

கன்னம் சிவக்க உண்மையில் 
வெட்க பட வைத்தாய் ...!!!

Sunday, January 13, 2013

அசைவுகள் ...


உன்னுடைய சின்ன சின்ன 
அசைவுகள் கூட ...
என்னை யோசிக்கவும் 
கோபிக்கவும் வைக்கையில் ...
புரிந்தது ...
என்னுடைய சின்ன சின்ன 
அசைவுகள்...
ஆனந்தத்திற்கும் 
பூகம்பத்திற்கும் ...
வழி வகுக்கும் என்று ...!!!

Saturday, January 05, 2013

டிராபிக் ஜாம்...


நீ மௌனமாய் இருக்கும் ...
ஒவ்வொரு நொடியும் ...
எங்கு இருந்து தான் 
ஓர் ஆயிரம் எண்ணங்கள் வந்து 
மூலையில் டிராபிக் ஜாம் செய்கிறதோ 
தெரியவில்லை ...!!!

Tuesday, January 01, 2013

சிற்பம் ...


உன்னுடைய சின்ன சின்ன ...
கோபங்கள் புரிய ஆரம்பிக்கும் 
இந்த தருணங்கள் ...

உன் அன்பை சிற்பமாய் ..
வடித்து தருகிறது ...!!!

உளியால் விழும் அடிகளை  
சந்தோசமாய் தாங்கி கொள்கிறேன் 
அதற்காகவே ...!!!

Related Posts Plugin for WordPress, Blogger...

உங்கள தானுங்க ...


இங்கே வந்து சென்றதற்கான கால்தடத்தை(COMMENTS) விட்டு செல்லுங்கள் ...

அதுவே என் கவிதைகளுக்கான கெளரவம் ...!!!