Thursday, February 28, 2013

அனுமதி ...


எனது அன்பு ...
சின்னதாய் கர்வப்பட்டு கொள்ள 
அனுமதி வேண்டி ...
வாசல் நுழைகையில் ...

கொஞ்சமாய் கூட 
வழிவிடாமல் ...
தடுத்து விடுகிறது 
உனது அன்பு ...!!!

Wednesday, February 27, 2013

நினைவுகளில் ...


கண்மூடி நிசப்தத்தை 
மென்மையாய் உணர்கையில் 
மூச்சுக்காற்றை விட 
வெகு வேகமாய் ...
சுழல்கிறாய் நினைவுகளில் ...!!!

Tuesday, February 26, 2013

மட்டும் ...


எங்கேயாவது தொலைந்து
போய் விட ஆசை...
உன்னோடு மட்டும் ...

அணு அணுவாய் அன்பை 
அடுக்க ஆசை ...
உனக்காக மட்டும் ...

என்னை நானே சிற்பமாய் 
வடிக்க ஆசை ...
உன் பிடித்தல்களுக்கு மட்டும் ...!!!

Sunday, February 24, 2013

வட்டி ...



உனது வீட்டு வாசலில் 
வரிசை கட்டி ...
வட்டி கட்ட நிற்கிறது 
எனது கவிதைகள் ...

உன்னிடம் உணர்ச்சிகளை 
கடன் வாங்கி வார்த்தைகள்...
வாக்கியமாவதால் ...!!!

இந்நாட்களில் ...


உன்னை நேசிப்பதை விட 
அதிகமாக வெறுக்கிறேன் ...

இந்நாட்களில் ...

நீ என்னை விட அதிகமாக 
என்னை நேசிப்பதால் ...!!!

Wednesday, February 13, 2013

உணர்கிறேன்...



Sunday, February 10, 2013

நிஜம்...


நிறைய இடங்களில் 
நீ இல்லாத குறைகளை ...

நிறைகளாய் நிரப்புகிறது 
நிந்தன் நினைவுகள் ...

நினைவுகளில் நிஜம்
நீ மட்டுமே ...!!!

Monday, February 04, 2013

பயம் ...


எப்பொழுதுமே என்னை நிழலாய் 
தொடர்வாய் என அறிவேன் ...

எங்கேனும் இருட்டில் சிக்குண்டு 
உன்னை தொலைத்து விடுவேனோ ...

என என் மேல் தான் ...
எனக்கு பயம் ...!!!

நாட்கள்...


வாடை காற்றோடு 
எண்ணங்களும் ...
விரைந்து செல்கையில் ...
இந்த நாட்கள் மட்டும் 
உறைந்து விடாதா ...???

Related Posts Plugin for WordPress, Blogger...

உங்கள தானுங்க ...


இங்கே வந்து சென்றதற்கான கால்தடத்தை(COMMENTS) விட்டு செல்லுங்கள் ...

அதுவே என் கவிதைகளுக்கான கெளரவம் ...!!!