Sunday, March 24, 2013

ஹைக்கூ காதல்கள் - 8


எங்கேயோ வாசிக்கும் 
குட்டி குட்டி காதல் கவிகள் 
மிரட்டுகிறது ...
காதலித்து தொலை என்று ...!!!


வெயிலோடு சாரல் 
கொஞ்சம் காபி 
சிணுங்கலாய் மௌனம் 
நிறைய காதல் 
இவற்றோடு நாம் ...!!!

திருஷ்ட்டி பொட்டு 
வைக்கவா என்று 
முத்தம் பதித்தாய் ...
அதற்கு தண்டனையாய் 
உன் கன்னத்திலும் 
திருஷ்ட்டி பொட்டு...
இதழ் வடிவில்  ...!!!

கேள்வி ...


Thursday, March 21, 2013

நான் நானாக ...



சுதந்திரம் சுவாசமாகும் 
தருணம் ...

பிடிக்காததை பிடிக்கவில்லை 
என உரக்க கத்தி ...

பிடித்தல்களை மட்டும் 
செயல்களாக உருமாற்றி ...

தோல்விகளை நிமிர்ந்து 
தோள்களில் ஏற்று ...

வெற்றிகளை தலைகுனிந்து 
வரவேற்று ...

நான் நானாக இருக்கும் 
தருணங்கள் ...

கனவுகளிலும் கனவுகளாக 
மட்டுமே ...!!!

Wednesday, March 20, 2013

அத்தனையுமே ...


மனங்களிலே வஞ்சனைகள் 
வார்த்தைகளிலே வர்ணங்கள் ...

கண் முன்னே நாடகங்கள் 
முதுகின் பின் எக்காளங்கள் ...

முகாரியாய் முற்றத்திலே 
ஆனந்தமாய் புறவாசலிலும் ...

அத்தனை அத்தனையுமே 
அரங்கேற்றமே ...!!!

விடை ...


நாட்களை எண்ணி
 கொண்டிருக்கும் தருணம் ...

தோல்வியின் வலி ...
சின்ன வெற்றி ...

நட்பின் கீதம் ...
பிரிவின் வாசம் ...


அடுத்தது என்ன ...???
அனைத்திற்கும் ...


கண்ணீர் மட்டுமே 
விடை ...!!!

Sunday, March 17, 2013

தோழமை...


தைரியமாக தவறுகள் 
செய்வேன் ...

என் காது பிடித்து 
மன்னிப்பு கோரும் முன் ...

உன் தோழமை முந்திக்கொண்டு 
தோள்  கொடுக்க இருக்கையில் ...!!!

Friday, March 08, 2013

பெண்(ணே)ணியம் பேசு ...


அதை செய்யாதே
இதை செய்யாதே 
பாதுகாப்பு பாதுகாப்பு 

அங்கே செல்லாதே 
இங்கே செல்லாதே 
பாதுகாப்பு பாதுகாப்பு 

அதை அணியாதே 
இதை அணியாதே 
பாதுகாப்பு பாதுகாப்பு 

அவரை நம்பாதே 
இவரை நம்பாதே 
பாதுகாப்பு பாதுகாப்பு 

எத்தனை எத்தனை 
பாதுகாப்பு ...???

ஒருவரேனும் ...
ரௌத்திரம் பழகு 
என்றீரா ...???

உலகின் வாழ்வாதாரம் 
பெண் தானே ....???

விடை அறியோம் ...!!!
விடை அறிந்தால் ...???

365 பெண்கள் தினம் ...
ஒரே ஒரு ஆண்கள் தினம் ...!!!

பி.கு : பெண்கள் தின கவிதை போட்டியில் முதல் பரிசு பெற்று தந்த வார்த்தை கோவை ...

Friday, March 01, 2013

தவறு...


ஒவ்வொரு முறை ...
தவறு செய்து விட்டு 
அதற்கு விலையாக 
தரப்படும் ...
உன் மௌனங்களிலே 
மறித்து விடுகிறேன் ...!!!

Related Posts Plugin for WordPress, Blogger...

உங்கள தானுங்க ...


இங்கே வந்து சென்றதற்கான கால்தடத்தை(COMMENTS) விட்டு செல்லுங்கள் ...

அதுவே என் கவிதைகளுக்கான கெளரவம் ...!!!