Sunday, April 21, 2013

சிக்குண்டு ...


விடியா இரவுகளாகவும் ...
முடியா நாட்களாகவும் ...
எங்கேனும் சிக்குண்டு ...
சுழலாமல் நின்றுவிடாதா 
பூமி ...!!!

வில் ...


என்னை ....
ஒரு நொடியில் 
அழ வைப்பதும் ....
அரை நொடியில் 
சிரிக்க வைக்கவும் ...

ராமனை போல் ...
உன்னால் மட்டுமே ..
உடைக்க முடிந்த வில் ...!!!

Wednesday, April 10, 2013

ஆயுதங்கள் ...


கொஞ்சம் தோல்வி 
கொஞ்சம் சருக்கல் 
கொஞ்சம் தவறு ...

கொஞ்சம் கண்ணீர் 
கொஞ்சம் ஏமாற்றம் 
கொஞ்சம் வலி ...

கொஞ்சம் கொஞ்சமாய் 
என்னை செதுக்கும் 
ஆயுதங்கள் ...

சிற்பமாகவா ...???
சிதறும் கல் துகளா ...???
என் வலிமையின் விடையே ...!!!

Wednesday, April 03, 2013

பார்வைக்கு ...


நாள் முழுதும் உன்னை 
தேடி கொண்டிருந்தேன் ...
இப்பொழுது உன்னோடு சேர்த்து 
நிலவையும் தேடி கொண்டிருக்கிறேன் ...
இருவருமே கிட்டவில்லை ...
பார்வைக்கு ...!!!
Related Posts Plugin for WordPress, Blogger...

உங்கள தானுங்க ...


இங்கே வந்து சென்றதற்கான கால்தடத்தை(COMMENTS) விட்டு செல்லுங்கள் ...

அதுவே என் கவிதைகளுக்கான கெளரவம் ...!!!