Sunday, June 30, 2013

நீ ...


மழை துளிக்குள் ஒளிந்திருக்கும் 
மண்வாசனை ...
கண்ணீர்த்துளிக்குள் ஒளிந்திருக்கும் 
அன்பு ...

பூங்காற்றில் பெரும் புயல் ....
உந்தன் பொய்யான கோபம் ...

புல் நுனி பனி ...
என் நட்பின் நீ ...!!!

ஒளிந்துகொள்கிறேன் ...


எதிர் பார்ப்பு ...
ஏமாற்றம் ...
கண்ணீர் ...
சமாதானம் ...
வேண்டாம் ஒளிந்துகொள்கிறேன் ...
வேற்று கிரகத்தில் ...!!!

Friday, June 28, 2013

ஹைக்கூ காதல்கள் - 10


 சின்ன சின்ன ஹைகூக்களாய் 
ஒளிந்து கொண்டு ...
கண்ணாம்பூச்சி ஆடுகிறது 
காவியமான காதல் ...!!!



செல்ல சண்டைகளில்
ஒளிந்திருக்கும்...
கொள்ளை அன்பு ...!!!

கவிதை ...


கவிதையே கவிதையாய் ...
நிரம்பி வழியும் ...
கவிதையான கவிதை ...
நீ ...!!!

தோட்டம் ...


உன் ...
அன்பின் உரத்திலும் ...
கோபத்தின் கண்ணீரிலும் ...
அழகான பார்வையிலும் ...
பூத்து குலுங்கும் ...

என் ...
கவிதை தோட்டம் ...!!!

Sunday, June 23, 2013

மௌனமாய் ...


உன் ..
அன்பிற்காக ஏங்கி ...
அருகாமைக்கு விசும்பி ...

கொஞ்சம் கொஞ்சமாய் 
சாவதை விட ...

இன்றே மௌனமாய் 
இறந்து விடுகிறேன் ...!!!

Friday, June 21, 2013

அமைதியாய் ...


எங்கே சென்றது ...
கதைத்து கொண்டே இருக்கும் 
அழகான நேரங்கள் ...

ஆனாலும் அழகாய் தான் 
இருக்கிறது ...
அமைதியாய் அன்பு ...!!!

Wednesday, June 19, 2013

ஹைக்கூ காதல்கள் - 9


கதவை தட்டும் முன் ...
வாசல் திறக்கிறேன் ...

உந்தன் வாசம் ...
இழுத்து விடுகிறதே ...!!!


உன்னிடம் 
அன்பானது கோபம்...
அழகானது  திமிர் ...
ஆழமானது அடம் ...
அதட்டலானது  காதல் ...!!!

Tuesday, June 18, 2013

சின்ன சின்ன...


சின்ன சின்ன எதிர்பார்ப்புகள் ...
சின்ன சின்ன பகிர்தல்கள் ...
சின்ன சின்ன சிரிப்புகள் ...
சின்ன சின்ன ஆனந்த அதிர்ச்சிகள் ...
சின்ன சின்ன பாராட்டல்கள் ...
சின்ன சின்ன சத்தியங்கள் ...
சின்ன சின்ன நிறைய நிறைய நிறைய 
நிறைய நிறைய நிறைய ...
ஏமாற்றங்களும் கூட ...!!!
கொஞ்சம் கண்ணீரும் தான் ...!!!

Saturday, June 01, 2013

நீள்கிறது ...


ஒற்றை பாடல்...
பலமுறை சுழன்றாலும் 

வரிகளில் நிரம்பி வழிவது 
நீயாகவும் ...

இசையாய் பூப்பது உந்தன் 
நினைவுகளாகவும் ...

நீள்கிறது ...!!!

கவிதைகளை ...


கவலைகளுக்குள் புதைந்து 
கவிதைகளை ...
தொலைத்து விட்டேன்...!!!
Related Posts Plugin for WordPress, Blogger...

உங்கள தானுங்க ...


இங்கே வந்து சென்றதற்கான கால்தடத்தை(COMMENTS) விட்டு செல்லுங்கள் ...

அதுவே என் கவிதைகளுக்கான கெளரவம் ...!!!