Thursday, October 24, 2013

நானே...


எதிர்பார்ப்புகளும் ...
ஏமாற்றங்களும் ...
பழகிவிட்ட எனக்கு 
புதுப்புது ...
எதிர்பார்ப்புகளும் ...
ஏமாற்றங்களும் ...
திக்குமுக்காட செய்கின்றன ...!!!


எத்தனை ஆண்டுகள் 
ஆனாலும் ...
எனக்கு நானே 
ஆச்சர்யக்குறி ...!!!

ஹைக்கூ காதல்கள் - 12


நான் செய்யும் 
சின்ன சின்ன 
தவறுகளுக்கு ...

நீ செல்லமாய் 
காது மடல் திருகுவது 
தண்டனையல்ல ...

பரிசு ... !!!


நான் அரை தூக்கத்தில் 
உளறுவதை ...

சங்கீத சங்கமம் 
என வஞ்சித்து 
புகழ்வதே ...

உனது கிறுக்குத்தனம் ... !!!


எனது கம்மல் ஜிமிக்கியின் 
அசைவிற்கு ஏற்ப 

உனது மூச்சு காற்று ...
மேல் எழுந்து கீழ் செல்வதற்காகவே 

தலை அசைத்து கொண்டே 
இருக்கலாம் ...!!!

நிழல் ...


கடலான நினைவு 
தேனில் ஊறும் ...
இதயத்தை ...

சின்ன சின்ன எறும்புகளாய் ...
அரித்து கொண்டிருக்கிறது ...

நிஜங்களின் நிழல் ...!!!

Saturday, October 19, 2013

வாசித்ததை ...


நிதானமாய் வாசித்து 
கொண்டிருக்கையில் ...

சட்டென வந்து போகும் 
உந்தன் நினைவுகள் ...

புன்னகைத்து மரிக்க 
செய்கின்றன வாசித்ததை ...!!!

Thursday, October 03, 2013

தற்கொலை ...


விழுந்து அடித்து கொண்டு 
வெளிவரும் கண்ணீருக்கு 
தெரியாது ...
அவை உனக்காகவே 
மரணிக்க ..
கன்னங்களில் தற்கொலை 
செய்கின்றன என்று ..!!!

ஹைக்கூ காதல்கள் - 11

என்றாவது ஒரு நாள் ...
நான் இல்லை என்று 
அறிந்தும் ...
என்னை தேடும் உன் கண்களை 
நான் ரசித்திட ...
வேண்டும் ...!!!


உனக்கு பிடித்த நிறத்தில் சேலை...
அணிந்து கொண்டதற்க்காக ...
செல்லமாய் கிடைத்த கொட்டு தான்...
நினைவில் வருகிறது...
ஒவ்வொரு முறை 
சேலை அணிகையில் ...



உன் தோள் சாய்ந்து 
தூங்குகையில் ...
என் ஒற்றை முடி ஒதுக்கும் 
உன் கைகளுக்கு ...
ஆயிரம் முத்தங்கள் 
பரிசாக தரலாம் ...!!!

Related Posts Plugin for WordPress, Blogger...

உங்கள தானுங்க ...


இங்கே வந்து சென்றதற்கான கால்தடத்தை(COMMENTS) விட்டு செல்லுங்கள் ...

அதுவே என் கவிதைகளுக்கான கெளரவம் ...!!!