Tuesday, May 27, 2014

ஹைக்கூ காதல்கள் - 16

என் ஆயுள் ரேகை 
தேயும் அளவிற்கு ...

உன் தலை முடி 
கோத வேண்டும் ...!!!

சிறு ஆசை ...


பிறந்து விட்ட பேராசையை 
கொன்று பழகி ...

சிறு ஆசை கூட...
துளிர்க்க ..

நடு நடுங்கி இருதய 
மூலையில் முடங்கி ...

மூச்சு திணறி தானே 
மரணிக்கிறது ...!!!!
  

சுழல்வதற்கு...


என் நிகழ்காலத்தில் ...
இறந்த காலத்தை உயிர்ப்பித்து ...
பிறவா எதிர்காலத்தை புதைத்து ...

அந்த கணமே கணம் 
கொன்று விட்ட ...
என்னிடம் ...

ஞாலம் பிச்சை எடுக்க வேண்டும் 
சுழல்வதற்கு ஆணை கேட்டு ...!!!

கொஞ்சம் பேராசை தான் ...!!!

Thursday, April 24, 2014

நகல் ...


நீ பேசிய ஒவ்வொரு 
வார்த்தைகளையும் ....

மனம்  நினைவுகளில் 
நகலெடுத்தே ...
சிரித்து கொண்டே 
இருக்கிறது ...

ஏனென்றே 
தெரியவில்லை ....!!!!!!!!!

Thursday, March 20, 2014

நீ...


வெறிபிடித்த ஆனந்தம் நீ...
மென்மையான கோபம் நீ ...
சந்தோஷமான அழகை நீ ...
சிக்கலான சிரிப்பு நீ ...

கார் கால சூரியன் நீ ...
வெயில் கால மழை நீ ...
இலையுதிர் கால பூ நீ ...

வேற்று கிரஹ மனிதன் நீ ...
பூமியில் ஏலியன் நீ ...

நீ நீ நீ மட்டுமே நீ ...!!!

Sunday, February 23, 2014

வெறுமை...


வண்ணங்களை தொலைத்த 
வண்ணத்துப்பூச்சியாய் ...

இங்கே வண்ணங்களை 
கண்ணீரில் நிரப்ப முயற்சித்து ...

கண்ணீரும் சிறுமையாய் வற்றி ...
வெறுமை மட்டுமே மிஞ்சி இருக்க ...

வெறுமையை துரத்த ...
உந்தன் நினைவுகள் வண்ணங்களாய் 
வந்து ஒட்டிக்கொள்ள ....

கண்ணீர் ஊற்றெடுக்கிறது
வெறுமையை நோக்கியே ... !!! 

இதய துடிப்பில் ...


இரவின் நிசப்தத்தில் ...
மெல்லமாய் ஒலிக்கும் ...
உந்தன் நினைவலைகள் ...
இதய துடிப்பில் ...
ஸ்ருதி சேர்க்கும் ...
இசையாய் ...!!!

Sunday, February 16, 2014

நட்பு ...


திரும்பி பார்க்க முடியும் ...
திரும்பி போக முடியாது ...

சிரித்ததை நினைத்தால் அழுகை வரும் ...
அழுததை நினைத்தால் சிரிப்பு வரும் ...

எங்கோ அழைக்கப்படும் சிறு பெயர் தான் ...
ஆயிரம் சில்லுகளாய் சேகரிக்கப்பட்ட 
ஒற்றை நிழல் படமாய் ஒரே நொடியில்  ...


நீரில் நினைந்த பஞ்சாய் கணம் கூடினாலும் ...
சுகமாகவே சுமக்க தயாராகவே ஒவ்வொருவரும் ...

ஏக்கங்கள் நிறைந்தாலும் ...
தன்னிறைவாய் தோள்  சாய்வது ...

"பால்ய கால நட்பிடமே" ...!!!

Tuesday, February 11, 2014

ஹைக்கூ காதல்கள் - 15

விளையாட்டாக எத்தனையோ 
கவிகள் எழுதி இருந்தாலும் ...

வர்ணிக்க முடியாத 
வலியாகவே இருக்கிறது ...

காதல் தோல்வி ...!!!




கொஞ்சம் கொஞ்சமாக 
சேமிக்க நினைத்த 
மறுகணமே ...

சுக்கு நூறாக சேகரிக்க 
கூட முடியாத ...
அளவிற்கு நொறுக்க 
பட்டு விடுமென 
தெரியுமா என்ன ..

என் சின்ன இதயதிற்கு ...!!!

தருவது ...


சின்ன சின்னதாய் 
கரையானை போல் 
சேமித்த நினைவுகளை 
அழிப்பதை விட ...

பாம்பிற்கு தாரை வார்த்து 
தருவது ...
மிக கொடுமையானது ...!!!

Wednesday, January 15, 2014

நீ ....



செதுக்கும் ஒவ்வொரு 
கவிக்கும் ...

நிழலாய் நீ இருக்கிறாய் ...!!!
Related Posts Plugin for WordPress, Blogger...

உங்கள தானுங்க ...


இங்கே வந்து சென்றதற்கான கால்தடத்தை(COMMENTS) விட்டு செல்லுங்கள் ...

அதுவே என் கவிதைகளுக்கான கெளரவம் ...!!!